Tamil Cinema News | சினிமா செய்திகள்
நானே பெரிய காப்பி டா.. என்கிட்டயே காப்பி அடிக்கிறயா நீ? டி இமான் குமுறல்
தல அஜித் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தீம் மியூசிக்கை தற்போது பாலிவுட் படத்தில் காப்பியடித்து விட்டார்கள் என டி. இமான் ட்விட்டரில் குமறி கொண்டிருக்கிறார்.
சமீபகாலமாக டி. இமான் இசையமைத்து வரும் பாடல்கள் அவ்வளவாக மக்களின் மனதை கவரவில்லை. இவர் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளராக இருந்து, சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் மைனா, கும்கி, ஜில்லா என தொடர்ந்து எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் ஹிட் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
ஆனால் தற்போது இமான் பாடல்கள் அவ்வளவாக சரி இல்லை. ஒரே ட்யூனை வைத்து அனைத்து படத்திற்கும் போடுவது போல் இருப்பதாக இசை ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல், பழைய பாக்யராஜ் பாடலிலிருந்து சுட்டது அப்பட்டமாக தெரிந்தது.
அப்பேர்பட்ட டி. இமானிடமிருந்தே தீம் மியூசிக்கை காப்பியடித்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய அதிபுத்திசாலி என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

imman-tweet
வருண் தவான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ரகுல் பிரீத்சிங் ஆகியோர் நடித்துள்ள மார்ஜாவான் என்ற படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தல அஜித்தின் பிரபல தூக்குதுரை தீம் மியூசிக்கை காப்பி அடித்தது தெரியவந்தது.
ஏண்டா அவர் பொழப்புல மண்ணள்ளிப் போடுறீங்க..
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
