Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-karthik-naren

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட ஹீரோயினை தட்டி தூக்கிய தனுஷ்- D 43 லேட்டஸ்ட் அப்டேட்

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோ என்றால் அது தனுஷ் தான். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன்.

இதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் D 43 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Karthik Naren

மாபியா தொடர்ந்து கார்த்திக் நரேன் இந்த படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மலையாளத்தில் வைரஸ் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை கூட்டு சேர்த்து கதையை ரெடி செய்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக தனுசுக்கு கதாநாயகி மாளவிகா மோஹனன் என கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார்.

malavika mohananan in D 43

அம்மணி மாஸ்டர் ரிலீசுக்காக வைட்டிங். அடுத்தடுத்து ஒரு ரவுண்டு கட்டாயம் வருவார் என நம்புவோம்.

Continue Reading
To Top