தனுஷ்– கார்த்திக் சுப்புராஜ் படக்குழு வெளியிட்ட அடுத்த அறிவிப்பு.. பட இசையில் இப்படி ஒரு புதுமையா

D 40 – எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) கலையரசன், ஜுஜு ஜார்ஜ், அஸ்வத் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படம் லண்டனில் பூஜையுடன் துவங்கியது. தொடர்ச்சியாக 64 நாட்களில் இப்படத்தை முழுவதும் ஷூட் செய்து முடித்துள்ளதாக தயாரிப்பாளர் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் தனக்கு புதுமையான அனுபவம் கிடைத்ததாக சொல்லியுள்ளார். படக்குழுவுடன் இணைந்து ஷூட்டிங் சமயத்தில் உடன் இருந்து இசை அமைக்கும் தனது கனவு திருப்த்திகரமாக நிறைவேறியதாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment