D16 Theaterical Poster

துருவங்கள் 16  படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் தன் அடுத்த படத்திற்கு நரகாசூரன் என்று பெயர் வைத்ததும், அதை கவுதம் மேனனுடன் சேர்ந்து தயாரிப்பது நாம் அறிந்ததே. இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது.

செப்டம்பர் 16 ஊட்டியில் படத்தின் ஷூட்டிங்கை அரமபித்தார்.அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத் மிக்கா நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியிடப் போகிறார்கள். இதுவும் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா படம் தான்.

Naragasooran Team’s First Day Shoot In Ooty.

எப்பொழுதும் தன் ட்விட்டர் பக்கத்தினுள் ஆக்டிவாகவே இருப்பவர். தீபாவளியன்று
முதல் முறையாக காலை 5 மணி ஷோ செல்கிறான் என்ற டீவீட்டை தட்டினார்.

படத்தை கூட முதல் நாள் முதல் ஷோ போரூரில் உள்ள ஜி. கே சினிமாஸில் பார்த்துவிட்டு தளபதியின் புகழ் பாடினார்.

ரிலீஸுக்கு பின் மெடிக்கல் மாபியா, ஜிஎஸ்டி என்று பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருந்தது.நமக்கு தெரிந்த விஷயமே. பலரும் இந்த பிரிச்சனை குறித்து விவாதித்து வந்தனர்.

#KarthikNaraen #RandomClick #Naragasooran #ShootingSpot #WorkingStills #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நேரத்தில் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தன் ட்விட்டரில் இந்த கேள்வியை கேட்டார்-
‘மெர்சல் அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் மருத்துவர்களையும் கேலிக்குறி ஆக்கிவிட்டது, அவர் மனமுடைந்துஉள்ளனர்/ ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கெட்டவர்களா/ மருத்துவர் ஐந்து ரூபாய் வாங்க வேண்டும், நடிகருக்கு மட்டும் கோடிகளா?’

இந்த டீவீட்டிற்கு நம் இளம் இயக்குனர் பதில் கேள்வி கேட்டுள்ளார்:
‘மேடம், குற்றம் புரிந்தவர்கள் தான் எரிச்சல் அடைவார்கள். சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகமா பணம் சம்பாரித்து இல்லையா ? ஏன் அவர்களை கேள்வி கேட்க வேண்டியது தானே?’

இவர் இவ்வாறு நாசுக்காக பதில் கேள்வி கேட்டதை நம் நெட்டிசன்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்: இவர் தற்பொழுது நரகாசூரன் படத்தின் கடைசி ஷேடூல் ஷூட்டிங் இல்ல இப்போ பிஸியாக உள்ளார்.

விரைவில் படத்தை ரிலீஸ் பண்ணுங்க ப்ரோ.