India | இந்தியா
தங்கத்தை மிஞ்சும் சிலிண்டரின் தற்போதைய விலை தெரியுமா? அடக்கடவுளே!
Published on
இந்தியாவில் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதாவது மானியம் இல்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது முக்கிய தலைநகரங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் ரூ 149 உயர்ந்து ரூ 896 , டெல்லியில் ரூ 144.50 உயர்ந்து ரூ 858.50 ஆகவும் உள்ளதாம்.
மேலும் சென்னையில் ரூ 147 உயர்ந்து ரூ 881 ஆகவும், மும்பையில் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ 145 உயர்ந்து ரூ 829.50 ஆகவும் உள்ளதாம்.
இந்த விலை ஏற்றத்தினால் நடுத்தர மக்களின் நிலைமை பாதிக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
