Connect with us

Cinemapettai

cylinder

India | இந்தியா

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு

சென்னை: மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 76 ரூபாய் உயர்ந்துள்ளது.,

ஒவ்வொரு மாதத்தன் முதல் தேதியின் மானியம் இல்லாத அ சிலிண்டரின் விலைகள் சந்தை நிலவரம் மற்றும் கச்சா எண்ணைய் விலைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை நவம்பர் 1ம் தேதியான இன்று முதல் 76 ரூபாய் உயர்ந்து 696 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 31ம் தேதி மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலை 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போதைய விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள் வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top