Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-kasthuri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆபாசமா பதிவிட்ட அஜித் ரசிகர்களை அடிச்சு தூக்குங்க.. கஸ்தூரிக்கு ஆதரவாக உத்தரவிட்ட கோர்ட்

தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஸ்தூரி. பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களிலேயே நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை டுவிட்டரில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபகாலமாக ட்விட்டரில் சர்ச்சையை அதிகம் கிளப்பும் நாயகியாக வலம் வருகிறார் கஸ்தூரி. நேரடியாக அரசியல் தலைவர்களை தாக்குவது, முன்னணி நடிகர்களுக்கு எதிராக கருத்து பதிவிடுவது என அரசியல்வாதிகளையும் ரசிகர்களையும் பகைத்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தல அஜித் ரசிகர்கள், கஸ்தூரியை பற்றி ஆபாசமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்துள்ளனர். இதனை கண்டித்து கஸ்தூரி நேரடியாக அஜித் உங்க ரசிகர்களை கட்டுப்படுத்துங்கள் என அறிவுறுத்தினார்.

இதனால் கஸ்தூரி மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரிய போரே நடந்தது. அதன் உச்சகட்டமாக #DirtyKasturiAunty #dirtyAjithFans போன்ற ஹாஸ்டாக்குகள் போட்டு தங்களது சண்டையை இந்தியாவே பார்த்து சிரிக்கும்படி செய்து கொண்டனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரின் அறிவுரையின் அடிப்படையில் கஸ்தூரி, சைபர் கிரைமில் அஜித் ரசிகர்களை பற்றி புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக தவறாகப் மற்றும் ஆபாசமாக பதிவிட்ட அஜித் ரசிகர்களின் விவரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அஜித் ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ் : கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ, போவோம் என்ன பண்ணிட போறாங்க

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top