திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்

சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனம். அட்டகத்தி, சூது கவ்வும், பீட்ஸா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவரின் நிறுவனத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. இளம் இயக்குனர்கள், புது கலைஞர்கள் என்று கோடம்பாக்கத்தில் பலருக்கு அட்ரஸ் வழங்கியவர்.

mayavan cv kumar

மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ தான் தன் அடுத்த படத்தின் டைட்டில் என ட்விட்டரில் பதிவிட்டார். ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங்.

இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி, பிரியங்கா பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின்  மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.