Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாயவன் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சி.வி.குமார்
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனம். அட்டகத்தி, சூது கவ்வும், பீட்ஸா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவரின் நிறுவனத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. இளம் இயக்குனர்கள், புது கலைஞர்கள் என்று கோடம்பாக்கத்தில் பலருக்கு அட்ரஸ் வழங்கியவர்.
இயக்குனர் சி வி குமார்
மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். எனினும் படம் கலவையான விமர்சனமே பெற்றது.
இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என டைட்டில் வைத்துள்ளார். மேலும் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியிட்டுள்ளார். ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங்.
விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
