Theri-Vijay-ShootingOver-Vijay60-Bharathanஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக விஜய் இந்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ‘தெறி’ படத்தை பொறுத்தவரை அவருடைய பணி முற்றிலும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் ஓய்வு எடுப்பதற்காக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும், அவர் திரும்பி வந்தவுடன் ”’விஜய் 60′ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ‘விஜய் 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.