தமிழ் சினிமாவில் 2017ல் ரசிகர்களால் ஆவலாக எதிர்ப்பார்க்கும் படம் 2.O. 350 கோடி பட்ஜெட்டிலும், ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய் குமார் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர் என்பதும் படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ரஜினி, எமி ஜாக்சன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

இதனைதொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து சென்னையில் தொடங்குகிறதாம். இந்த படப்பிடிப்பில் அக்ஷய் குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம்.