Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரிசைகட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.. ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமா இன்று இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னிருந்த 3000 தியேட்டர்கள் இப்பொழுது 800 தியேட்டர்களாக மாறிவிட்டன. அவற்றில் வெளிமாநில படங்களுக்காகவே சில திரையரங்குகளும், உப்புசப்பு இல்லாத, உள்ளே செல்ல முடியாத அளவுக்கு சில திரையரங்குகளும் உள்ளன.
இவற்றை வைத்துதான் தமிழ்சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்களுக்கு இன்று தியேட்டர்கள் கிடைப்பதில்லை. பார்த்திபனின் ஒத்தசெருப்பு படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்க, அடுத்தவாரம் சிவகார்த்திகேயன் படம் வருவதால் ஒத்த செருப்பை தூக்க திட்டமிட்டுள்ளனர். அவர் எல்லோரிடமும் கெஞ்சி பார்த்து வீடியோவையும் வெளியிட்டார்.
நல்ல படங்களை விட வசூல்செய்யும் படங்களுக்குத்தான் தியேட்டர்களின் முன்னுரிமை.
இந்த வாரம் சிவகார்த்திகேயன் படம், அடுத்தமாதம் தனுஷின் இரண்டு படங்கள், விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள், திரிஷாவின் ஒரு படம், நாடோடிகள் 2, விக்ரம் மகனின் ஆதித்ய வர்மா, சிரஞ்சீவியின் சைரா, அரவிந்த் சாமியின் ஒரு படம், ஜி.வி. பிரகாஷின் ஒரு படம், புதுமுகங்களின் 15 படங்கள் என மாதத்தில் முப்பது நாளைக்கு 30 படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
தீபாவளிக்குல் ரிலீஸ் செய்ய வேண்டுமென்பதால் வரிசைகட்டி நிற்கின்றன. பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்பொழுதுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆனால் புதுமுகங்கள், சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. தயாரிப்பாளர் சங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல பெரியபடங்களை முடங்கும் நிலைமைக்கு தமிழ்சினிமா தள்ளப்பட்டுள்ளது
