Tamil Nadu | தமிழ் நாடு
CTS நிறுவனம் வைக்கும் அடுத்த செக் : ஒரே நாளில் 7 ஆயிரம் பேரின் வேலை காலி
ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் எப்போது தன்னுடைய வேலை காலியாகும் என்று தெரியாத நிலையிலேயே வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மிகப்பெரிய நிறுவனமான சீடிஎஸ் நிறுவனம் தன்னுடைய வருவாயை அதிகரிக்க வேண்டி செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் முக்கியமானதாக உள்ள காக்னிசன்ட் நிறுவனம் சுமார் 2 லட்சம் பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. கடந்தாண்டு சேரில் வருவாய் குறைந்ததனால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக காக்னிசன்ட் CEO பிரைன் கூறியுள்ளார்.
சுமார் 5000 புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், அதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் எனவும் நேரடியாகவே கூறியுள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் முதல் இடத்திலும், சீடிஎஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீடிஎஸ் பிரபல பேஸ்புக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் புரிதலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
