இன்று இரவு பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. சென்னை அணி படு மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றது, மறுபுறத்தில் பஞ்சாப் முக்கிய தருணங்களில் கோட்டை விட்டு மேட்சுகளை தோற்று வருகின்றனர். இரண்டு அணிகளும் ஜெயித்து பாயிண்ட்ஸ் டேபிளில் முன்னேறும் முயற்சியில் இன்று ஈடுபடுவர்.
சென்னை அணி பேட்டிங்கில் மோசமான துவக்கத்தின் காரணமாக சொதப்பி வருகின்றது. பவர் பிளே சமயத்தில் மிகவும் சுமாராக ஆடிவருகின்றனர். தோனி என்றுமே அதிரடி மாற்றங்களை செய்ய விரும்பாதவர். அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர். ஆனால் டீம் தொடர் தோல்விகளை சந்திக்க அதிரடி மாற்றங்களை செய்வாரா என வாங்க பார்ப்போம்.
என்ன தான் ஷேன் வாட்சன் சொதப்பினாலும் அவரை மற்ற மாட்டார் தோனி. எனினும் மிடில் ஆர்டரில் சொதப்பும் ஜாதவுக்கு பதில் இன்றையை போட்டியில் ருத்ராஜ் கைக்கவாட் அல்லது ஜெகதீசன் நாராயணன் இருவரில் ஒருவரை சேர்த்து அதிரடியாக ஆட சொல்ல வாய்ப்புள்ளது.
மற்றபடி அணியில் பெரிய மாற்றம் இருக்காது. இன்றும் பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் வெளியே தான் இருக்கும் சூழல் இருக்கும். ஆனால் பியூஸ் சாவ்லாவுக்கு பதில் கரண் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது.

CSK உத்தேச 11 – ருத்ராஜ் கைக்கவாட் / ஜெகதீசன் நாராயணன், ஷேன் வாட்சன், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, தோனி, டூவைன் பிராவோ, ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், பியூஸ் சாவ்லா/ கரண் சர்மா, தீபக் சாஹர்.