Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்று ஆடப்போகும் சென்னையின் டீம் இது தான்! கேதார் ஜாதவ் உள்ளே ஏன் தெரியுமா?

Sports | விளையாட்டு

இன்று ஆடப்போகும் சென்னையின் டீம் இது தான்! கேதார் ஜாதவ் உள்ளே ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2020 புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. முதல் போட்டியில் வென்ற சென்னை டீம், அடுத்த இரண்டு போட்டிகளிலும் பரிதாப தோல்வி அடைந்தது. பின்னர் ஆறுதல் வெற்றியை பிரம்மாண்டமாக வழங்கினர். பாய்ஸ் ஆர் பேக் என கொண்டாடிய ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே சென்ற மேட்சில் கிடைத்தது.

எளிதில் கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டிய சென்னை டீம், படு மட்டமான தோல்வியை தழுவியது. 167 ரன்களை சேஸ் செய்ய, 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 என்ற வலுவான நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது. சேஸிங்கில் தல தோனி 12 பாலில் 11 ரன்கள், மற்றும் ஜாதவ் 12 பாலில் 7 என தோல்விக்கு வித்திட்டனர். மத்திய வரிசையில் இருவரும் ஸ்பின் ஆட தடுமாறியது தான் உச்சம். ஜாதவ் ட்விட்டரில் கேலி பொருளானார். ஜாதவை நெட்டிசன்கள் ஒருபுறம் கிழித்து தொங்க விட, தோனி சொதப்பியது வெளியே தெரியாமல் மறைந்தது.

சிஎஸ்கே இன்று பெங்களூரு அணியுடன் மோதுகின்றனர். ஜாதவ் வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. ஆனால் சென்னை அணி நிர்வாகம் அவ்வாறு செய்யுமா என்பது சந்தேகம் தான்.

சுரேஷ் ரெய்னா விலகிய பின் ராயுடு, ஜாதவ் மற்றும் தோனி மீது அழுத்தம் அதிகரித்துள்ளது என்பது உண்மை தான். பௌலிங்கில் ஆப்ஷன் உள்ளது எனவே தான் நிகிடி, ஹாசெல்வுட் என முயற்சித்து பின் தாக்குர் மற்றும் சாஹருடன், கர்ரன், பிராவோ போதும் என முடிவு எடுத்தனர். தடுமாறிய சாவ்லாவுக்கு பதில் கரண் சர்மா தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன் படுத்திவிட்டார். ஆகவே பௌலிங்கில் பிரச்சனை இல்லை.

பேட்டிங் தான் சொதப்பலாக உள்ளது. அதுவும் குறிப்பாக மத்திய வரிசை. வாட்சன் டூபிளெஸ்ஸி டாப் ஆர்டரில் கலக்க இறுதியில் ஜடேஜா, கர்ரன் சமாளித்து வருகின்றனர். மத்திய வரிசையில் இருவர் க்ளிக் ஆகிவிட்டால் டீம் ஸ்ட்ராங் ஆகிவிடும். தோனி, ராயுடு, ஜாதவ் இடம் தான் அணி நிர்வாகம் இந்த பொறுப்பை கொடுக்கும்.

ஏற்கனவே வழங்கப்பட்ட வாய்ப்பை சொதப்பவிட்டனர் முரளி விஜய் மற்றும் ருத்ராஜ் கைக்கவாட். அடுத்த ஆப்ஷன் எனில் நாராயணன் ஜெகதீசன், இவரும் துவக்க ஆட்டக்காரர் . எனவே இவர்களில் யாரையும் மிடில் ஆர்டரில் விளையாட வைப்பது சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் தான். எனவே இன்றைய போட்டியில் ஜாதாவுக்கே இடம் இருக்கும் என்கின்றனர்.

CSK உத்தேச 11ஷேன் வாட்சன், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, கேதார் ஜாதவ், தோனி, டூவைன் பிராவோ, ஜடேஜா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர், கரண் சர்மா, தீபக் சாஹர். (ருத்ராஜ் கைக்கவாட் / ஜெகதீசன் நாராயணன்)

இன்றும் இவர் சொதப்பும் பட்சத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் ஒபெனிங்கில் வாட்சன் உடன் கைக்கவாட் / நாராயணன் இறங்க வாய்ப்புள்ளது. டூபிளெஸ்ஸி மூன்றாம் இடத்திற்கு சென்று விடலாம். தோனி பிளெம்மிங்கின் நம்பிக்கை என்னவாகிறது என இன்று பார்ப்போம் வாங்க.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top