Sports | விளையாட்டு
IPL-ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ ஹர்பஜன் சிங்கின் அட்டகாசமான பதிவு.!
நேற்று நடைபெற்ற IPL போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் அதனால் முதலில் பேட்டிங் செய்தது ஹைதராபாத் அணி.
மேலும் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது சென்னை அணி டூபிளசிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார், சேன் வாட்சன்96 ரன்கள் எடுத்து டீமை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதேபோல் சுரேஷ் வேணா உன் பொறுப்பாக ஆடி 38 ரன்கள் எடுத்தார் அதனால் 19.5 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை அணி.
இந்த நிலையில் வழக்கம் போல் ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அவர் கூறியதாவது “ஐபில் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே @ChennaiIPL னு ஒரு டீம் இன்னைக்கு #Playoff ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம்[email protected] ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ #CSk” என கூறியுள்ளார்.
ஐபில் ல கிடைக்குற கோப்பைக்கு கௌரவம் இருக்கு அத எடுக்கிற கைகளுக்கு பின்னால சரித்திரம் உண்டு. ஆனா அந்த கோப்பையை அடிக்கறதுக்கு ஏற்கனவே @ChennaiIPL னு ஒரு டீம் இன்னைக்கு #Playoff ல கால் பதிச்சுட்டாங்கனு தெரிய படுத்த வேண்டிய நேரம்.@IPL ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ #CSk pic.twitter.com/6xyaMspmRE
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 23, 2019
