11 வது சீசன் ஐபில் போட்டிகள் நேற்று துவங்கின. மும்பையில் மாலை 6 . 30 மணிக்கு கோலாகலமாக துவக்க விழா துவங்கியது. அதன் பின் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. ஆட்டம் மும்பையில் நடந்தாலும், சென்னை அணி இரண்டு வருடம் கழித்து வருவதால் ரசிகர்களின் பலத்த ஆதரவு இருந்தது.

டாஸ் வென்ற டோனி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். ஆடுகளத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது, பனி பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை, எனவே பந்து வீசுவதாக தோணி அறிவித்தார். எதிர்ப்பார்த்த வீரர்களில் முரளி விஜய் மற்றும் ஷரத்துல் தாக்கூர் அணியில் இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் லூயிஸ் களமிறங்கினர்.

லூயிஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார். ரோஹித் சர்மா 18 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும், இஷான் கிஷன் 40 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாண்டிய ப்ரதர்ஸ் அடித்து ஆடினார். க்ருனால் பாண்டியா 22 பந்துகளை 41 ரன்னும். தம்பி ஹர்டிக் 20 பந்துகளில் 22 ரன் அடித்தனர். கடைசி சில வர்களில் பிராவோ சிறப்பாக பந்து வீசினார். இல்லயென்றால் மும்பை எளிதாக 200 அசித்திருப்பார்கள். வாட்சன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இம்ரான் தாஹிர் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

166 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும் ராயுடுவும் இறங்கினர். வாட்சன் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராயுடு 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா (4 ரன்) , தோணி (5 ரன் ) மட்டுமே எடுத்து வெளியேறினார். ஒரு புறம் விக்கெட் சரிய, கேதார் ஜாதவ் காலில் தசைப்பிடிப்பால், ரன் ஓட முடியாமல் ரெட்டையர்டு ஹுர்ட் முறையில் வெளியேறினார். இளம் லெக் ஸ்பின்னர் மாயணக் மார்கண்டே சிறப்பாக பந்து வீசி, சென்னை அணியை திணறடித்தார்.

Bravo CSK

கடைசி ஐந்து ஓவரில் 60 ரன் தேவைப்பட்டது, சென்னை அணி கைவசம் மூன்று விக்கெட் தான் இருந்தது( ஜாதாவையும் சேர்த்து). பின்னர் டுவெய்ன் பிராவோ அதிரடியாக விளையாட தொடங்கினார். 30 பந்துகளை மட்டுமே சந்தித்த பிராவோ 68 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.மெகலீலேன் வீசிய ஒரு ஓவரில் 20 ரன்கள் குவித்தார். கடைசி ஓவர்களில் சிறப்பாகும் பந்து வீசும் இந்தியாவின் பும்ராஹ் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 19 ஓவர் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

கடைசி விக்கெட்டாக ஜாதவ் மீண்டும் இறங்கினார், மறுமுனையில் இம்ரான் தாஹிர். 6 பந்துகளில் 7 எடுத்தால் வெற்றி இன்றைய நிலையில் பங்களாதேஷின் முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்து வீசினார். முதல் மொன்று பந்துகளில் ரன் எடுக்கவில்லை. எனினும் நான்காவது பந்தில் ஸ்கூப் முறையில் 6 அடித்தார் ஜாதவ். பின்னர் அடுத்த பந்தில் 4 அடித்தார்.

ஜாதவ் அடித்த 0,0,0,6,4…

எனவே 1 பால் எஞ்சிய நிலையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றது. சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் பிராவோ ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Tahir

கடைசி மூன்று ஓவரில் மட்டும் சென்னை அணி 50 ரன்கள் விளாசி திரில் வெற்றிப் பெற்றது. எனினும் ஜாதவ் காயம் காரணமாக அடுத்துவரும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல மும்பையின் ஹர்டிக் பாண்டியாவும் தன் நான்கு ஓவர் வீசிவிட்டு வெளியேறினார். அவரின் காயம் குறித்தும் எந்த விளக்கமும் இல்லை.