இந்த வருட ஐபில் போட்டியில் மிகவும் வலுவான இரு அணிகளான சென்னை சூப்பர் கிங் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் நேற்று மாலை ஹைராபாத்தில் மோதின. இதற்கு முன்பு இங்கு நடைபெற்ற மாலை நான்கு மணி போட்டிகளில் குறைவாகவே ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. வெப்பம் முக்கிய காரணம்.

டாஸ்

 

டாஸ்ஸை வென்ற வில்லியம்சன் சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தார். காயம் பட்ட தவானுக்கு பதிலாக ரிக்கி புய் மற்றும் ஜோர்டானுக்கு மாற்றாக ஸ்டாண்ட்லேக் களமிறங்கினார்கள். சென்னை அணி தாஹிருக்கு ஒய்வு அளித்துவிட்டு டு பிளெஸ்ஸியை அணியில் சேர்த்தனர். வாட்சன் மற்றும் டு பிளெஸ்ஸி ஓப்பனிங் இறங்கினர். சன்ரைஸ்ர்சின் அருமையான பந்துவீச்சால் தடுமாறியது சென்னை. வாட்சன் 9 ரன்னில் அவுட் ஆனார். இந்த சீசனில் பவர் பிளேவில் குறைந்த பட்ச ரன்களை நேற்று சென்னை எடுத்து. 6 ஓவரில் 27 ரன் 1 விக்கெட்.

ரெய்னா- ராயுடு

சற்றே அவுட் ஆப் போர்மில் உள்ள ரெய்னா மற்றும் டு பிளேஸி ஜோடி சேர்ந்தனர். டு பிளெஸ்ஸி ரஷீத் கான் வீசிய முதல் ஓவரில் ஸ்டும்ப்பிங் முறையில் (11 ) அவுட் ஆனார். 10 ஓவர் முடிவில் 54 / 2 என தடுமாறியது சென்னை.

Ambati Rayudu

ராயுடு ஆரம்பம் முதலே அடித்து ஆடினார். ஆரம்ப காலங்களில் ரஞ்சி போட்டியில் அவரின் ஹோம் கிரௌண்ட் இதுவே. திட்டமிட்டு தடாலடியாக ஆடினார் அவர். ராயுடு ஒன்பது 4 , மற்றும் நான்கு 6 வுடன் 37 பந்தில் 79 ரன் எடுத்து துரதிரஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார். மறுபுறம் ரெய்னா 43 பந்தில் 54 ரன் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார். தோணி 12 பந்தில் 25 ரன் அடிக்க மொத்தமாக 182 ரன் குவித்தார்கள்.

சொதப்பிய பந்துவீச்சு

சென்ற போட்டியில் கையிலே புயலில் சிக்கிய ரஷீத் கான், இந்தப்போட்டியிலும் சொதப்பினார். நான்கு ஓவரில் 49 ரன்களை வழங்கினார். மேலும் புவனேஸ்வர் குமார் 3 ஓவர் வீசி 22 ரன் கொடுத்து 1 விக்கெட் வீசினார். சிறந்த பௌளரான அவருக்கு ஏன் நான்கு ஒவரும் காப்டென் வழங்க வில்லை என்பதும் புதிர் தான்.

சுமார் பேட்டிங் , சூப்பர் பௌலிங்

தவான் மற்றும் சாஹா தான் ஒபெநிங் ஆடி வந்தனர். நேற்றய போட்டியில் வில்லியம்சன் மற்றும் அறிமுக வீரர் ரிக்கி துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தீபக் சாஹர் அருமையாக பந்து வீசினார். ரிக்கி, பாண்டே மற்றும் ஹூடா சொற்ப ரங்களில் பெவிலியன் திரும்பினார். 5 ஓவரில் 22 / 3 என்ற நிலையில் தடுமாறியது இந்த அணி. முதலில் வில்லியம்சன் – சாகிப் ஜோடி சேர்ந்தனர். 37 பாலில் 49 ரன் எடுத்தார்கள். சாகிப் அவுட் ஆனது பதன் வந்து அதிரடியாக ஆடினார். வில்லியம்சன் 51 பந்தில் ௮௪ ரன் எடுத்து 18 வைத்து ஓவரில் அவுட் ஆனார். கடைசி 2 ஓவரில் 33 ரன் தேவைப்பட்டது. எனினும் தாகூர் வீசிய ஓவரில் பதான் 27 பாலில் 45 ரன் எடுத்து அவுட் ஆனார்.

ப்ராவோவின் கடைசி ஓவர்

ரஷீத் கான் மற்றும் சாஹா காலத்தில் இருந்தார். 19 ரன் தேவை பட்டது. சாஹா முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை, பின்னர் 2 ரன் , 1 ரன் ஓடினார். ஆக கட்சி மூன்று பந்தில் 16 ரன் தேவை. ரஷீத் கான் அதிரடியாக முறையே 6 , 4 அடிக்க. கட்சி பந்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற 6 ரன் தேவைப்பட, பிராவோ அம்சமான யார்க்கர் வீசி சென்னை வெற்றி பெற உதவி செய்தார். 4 பாலில் 17 ரன் எடுத்த ரஷீத் கான் ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.

அம்பதி ராயுடு மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்றார்.