CSK Dhoni Fleming

11 வது சீசன் ஐபில் போட்டிகள் நடந்துவரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் இரண்டாவது போட்டியை நேற்று விளையாடியது. மேலும் சென்னையில் தடை முடிந்த பின் அவர்கள் ஆடும் முதல் போட்டி. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார் .

ஆரம்பத்திலேயே அதிரடி பேட்டிங் செய்தனர் லின் மற்றும் நரேன். எனினும் சொற்ப ரங்களில் அவுட் ஆகினர். 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு கட்டத்தில் கொல்கத்தா தடுமாறிக் கொண்டிருந்தது. நன்றாக விளையாடிய ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 29 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ஷூ எறிந்த ரசிகர்கள்

காவிரி வேளாண்மை அமைக்க வேண்டும் என்றும், அது வரை ஐபில் போட்டிகள் நடத்த கூடாது என ஆரம்பம் முதலே பல திசைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மைதானத்தில் செல்லும் நுழை வாயிலில் கருப்பு நிற ஷர்ட், டி ஷர்ட் அணிந்த ஆண்களை நிறுத்தி அவர்களுக்கு மாற்றாக மஞ்சள் ஜெர்ஸியை அளித்தனர். மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தீடீர் என கூச்சலிட்டு தங்கள் காலணிகளை மைதானத்தினுள் வீசினர். உடனே அங்கு பரபரப்பு ஆனது. போலீஸ் விரைந்து அவர்களை கைது செய்தனர். ஜடேஜா மற்றும் டு பிளெஸ்ஸி, அந்த காலணிகளை அப்புறப்படுத்தினர். செல் போன் தவிர்த்து வேறு வெளி உணவு, தண்ணீர் பாட்டில், பாணர், என எதுவும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிபிடித்தக்கது.

#CSK #ChennaiSuperKings #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஸல் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அதிரடியால் தான் இந்த இமாலயல இலக்கை அடைந்தது கொல்கத்தா அணி. பல பௌலிங் ஆப்ஷன் இருந்து தோணியால் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

ANDRE RUSSELL
அதிரடி ஒபெநிங்

துவக்க ஆட்டக்கார்கள் ராயுடு மட்டும் வாட்சன் சிறப்பான துவக்கத்தை தந்தனர். வாட்சன் 19 பந்தில் 42 ரன், ராயுடு 26 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். எனினும் சிறந்த துவக்கத்தை வீணாக்கும் வகையில் தோனி மற்றும் ரெய்னா சொதப்பினார். இதில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ரெய்னா அவதிப்பட்டார்.12 பாலில் 14 ரன் எடுத்த நிலையில் நரேன் பந்தில் காட்சி கொடுத்து அவுட் ஆனார்.

சாம் பில்லிங்ஸ்

இந்நிலையில் 12 ஓவரில் ரன் ரேட் தேவை 13 ஆக உயர்ந்தது. இங்கிலாந்தின் இளம் விக்கெட் கீப்பர் பாட்ஸ்மான் பில்லிங்ஸ் அதிரடியாக ஆடினார். 21 பந்தில் அரைசதம் விளாசி, சென்னை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். 16 வது ஓவரில் 28 பந்துகளில் 25 ரன் எடுத்து சாவ்லா பந்தில் கீப்பர் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.

Sam Billings

அரங்கமே பிராவோ என கூச்சலிட, சென்னை நிர்வாகம் ஜடேஜா அவர்களை இறக்கியது. அடித்து ஆடிய பில்லிங்ஸ் 56 ரன்னில் 18 . 3 ஓவரில் அவுட் ஆனதும் பிராவோ இறங்கினார்.

17 ரன் தேவை கடைசி ஓவர்

கடைசி ஓவரை வினய் குமாரிடம் கொடுத்தார் கார்த்திக். பிராவோ எதிர்கொள்ள முதல் பாலே புல் டாஸ் நோ பால் வீசினார். ப்ராவோவும் சிக்ஸுக்கு பந்தை பறக்கவிட்டார். ஃப்ரீ ஹிட் ஆக கிடைத்த பந்தில் இரண்டு ரன்கள். ஒரு பந்தில் எட்டு ரன்கள். இரண்டாவது பதில் ஒரு ரன்.மூன்றாவது பந்து வைட் . மீண்டும் வீசப்பட்ட மூன்றாவது பாலில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஒரு சிங்கிள். ஜெயிக்க 4 ரன்கள் தேவை என்ற நிலையில் வினய் வீசிய ஸ்லொவ் பாலை கணித்து சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. மீதம் ஒரு பந்து உள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருதை பில்லிங்ஸ் தட்டி சென்றார்.

சினிமாபேட்டை அலசல்

முந்தைய போட்டியில் காயம் காரணமாக விலகிய ஜாதவ் மற்றும் வுட் இருவருக்கும் பதிலாக ஷரத்துல் தாக்குர் மற்றும் பில்லிங்ஸ் இருவரையும் இறக்கியது சென்னை அணி. இருவருமே நேற்றய போட்டியில் அசதி விட்டனர். எனினும் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள சற்றே தோனி தடுமாறுவதும், ரெய்னா பார்ம்மில் இல்லாததும் சென்னை அணிக்கு தலைவலியை உருவாகியுள்ளது.

கார்த்திக்குக்கு போதிய கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாமையே , இந்த தோல்விக்கு முழு காரணம். யாதவ் மற்றும் நரேன் இருவரையும் அழகாக ரொட்டேட் செய்யவில்லை அவர். மேலும் வினய் குமாருக்கு இறுதி ஓவர் கொடுத்ததும் தவறே. லின் மற்றும் உத்தப்பா உதவி கொண்டு விரைவில் சில தவறுகள் செய்வதை அவர் தவிர்ப்பது நல்லது. மேலும் மத்திய வரிசையில் ரிங்கு சிங் மற்றும் பௌலர் வினய் குமாருக்கு பதில் அணியில் உள்ள இளம் யூ 19 வீரர்களை மாற்றாக இறக்குவது பல தரும் முடிவாக இருக்க வாய்ப்புள்ளது.