Sports | விளையாட்டு
தரமான ஸ்கெட்ச் போட்டு கொடுத்த தோனி- சிஎஸ்கே அதிரடி வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் சொத்துப்புவதில் சூப்பர் கிங்ஸ் ஆக தான் இந்த ஐபிஎல் சீசனில் உள்ளனர். மும்பையுடன் முதல் ஆட்டத்தில் மற்றும் பஞ்சாப் மேட்சில் தான் இதுவரை முழு ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றி, எனவே அடுத்த ஏழில் 6 வெற்றி பெற்றால் மட்டுமே பிளே – ஆப் செல்வது சுலபம் என்ற நிலையில் உள்ளனர்.
துபாயில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து.
பேட்டிங்கில் தான் அடித்து ஆட வேண்டும் என தோனி முன்பே சொல்லி இருந்தார். அது போல் செய்ய நேற்று சாம் கர்ரன் ஒபெநிங் ஆட வந்தார் டு பிளெஸ்ஸி அவர்களுடன். 21 பாலில் 31 எடுத்தார். வாட்சன் மற்றும் ராயுடு இருவருமே வாய்ப்பு கிடைத்த சமயத்தில் பௌண்டரி அடித்து அசத்தினர். வாட்சன் 38 பந்தில் 42 , ராயிடு 34 பந்தில் 41 எடுத்தனர். இறுதியில் தோனி 13 பாலில் 21 மற்றும் ஜடேஜா 10 பாலில் 25 அடித்தது டீமுக்கு நல்ல ரன்கள் வர உறுதுணையாக இருந்தது.
ஆரம்பத்தில் அதிரடி துவக்கம் கிடைத்தது. மத்திய ஓவர்களில் ஒருவர் மட்டும் அடிக்க, இன்னொருவர் ஸ்ட்ரைக் எடுத்து கொடுக்க என இல்லாமல், இருவரும் அடித்து ஆடியது பிளஸ் ஆக அமைந்தது. எனினும் டாட் பாலின் எண்ணிக்கை அதிகம் தான், அதனை விரைவில் சரி செய்ய வேண்டும் சென்னை வீரர்கள். ரஷீத் கானின் 4 ஓவரில் விக்கெட் இழக்காமல் 30 ரன் அடித்தது, இவர்களின் பேட்டிங் திட்டமிடல் பற்றி தெளிவாக தெரிய படுத்துகிறது. பிராவோ டக் அவுட் ஆகியும், ஜடேஜா அழகாக பீல்டு காப்பில் பௌண்டரிகள் அடித்தது அழகோ அழகு.

csk-cinemapettai
அடுத்து தோனி பந்து வீச்சு சமயத்தில், வீரர்களை முடக்கி விட்டுக்கொண்டே இருந்தார். சாஹருக்கு இப்போட்டியில் நான்கு ஓவர்களையும் வழங்கினார், அதுவும் தொடக்கத்திலேயே. கர்ரன் 3 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசி வார்னர் என்ற முக்கிய விக்கெட்டை எடுத்தார். பவர் பலே முடிந்ததும் பால் ஜடேஜா வசம் செல்ல அவர் பார்ஸ்டோவ் விக்கெட்டை எடுத்தார். பிராவோ சூப்பர் ரன் அவுட் வாயிலாக மனிஷ் பாண்டேவை காலை செய்தார்.
கரண் சர்மா திட்டமிட்டு வீசினார், பராக் மற்றும் வில்லியம்சன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17 வது ஓவரில் சொதப்பினாலும் தோனி சுதாரித்து செயல் பட டீம் வென்றது. 22 ரன் தேவை கடைசி 6 பாலில் என்ற நிலையில் பிராவோ 1 ரன் கொடுத்து 1 விக்கெட் எடுத்து செம்ம சூப்பர். பேட்டிங், பௌலிங் என கேட்டது காட்டிய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
கட்டாயம் ஜெயிக்க வேண்டிய சூழலில், சென்னை கலக்கி விட்டனர். ஆனால் இது போல அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆட வேண்டும். இது போல பேட்டிங்கில் முன்னின்று, பந்துவீச்சாளர்களை தட்டி கொடுத்து தோனி டீம்மை வழி நடத்தினால் பிளே – ஆப் செல்ல வாய்ப்பு உள்ளது உஎன்றே தோன்றுகிறது.
