fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிஎஸ்கே இந்த சீசன் ப்ளே ஆப் ஆடுவாங்க- ஆதாரத்தை சுட்டி காட்டி பேசும் முன்னாள் வீரர்

csk-team

Sports | விளையாட்டு

சிஎஸ்கே இந்த சீசன் ப்ளே ஆப் ஆடுவாங்க- ஆதாரத்தை சுட்டி காட்டி பேசும் முன்னாள் வீரர்

டாடிஸ் டீம் என கிண்டல் செய்தாலும், கடந்த இரண்டு சீசன் சூப்பர் ஆக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். இம்முறை கொரோனா தொற்று காரணமாக இந்தியாவை விட்டு போட்டிகள் வெளியே சென்றது, லாக் டவுன், பயோ பப்பில் என்பதும் இவர்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. இளம் வீரர்கள் குறைவு, சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற வீரர்கள் அதிகம் உள்ள டீம். பிட்னெஸ் சமாச்சாரம் என பரிதாபம் ஆகிவிட்டனர்.

ipl points table

10 போட்டிகளில், ஏழில் தோல்வி, 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை இந்தளவுக்கு சொதப்பியது. எனினும் இனி தொடர்ச்சியாக வெற்றி, மற்ற டீம் தோல்விகளை சந்தித்தால் சி எஸ் கே பிளே ஆப் ஆடும் வாய்ப்புள்ளது என ரசிகர்கள், விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால் தோனியும் டீம்மும் அது போன்ற மனநிலையில் உள்ளதாக மேட்ச் பார்க்கும் நமக்கு தோன்றவில்லை.

முன்னாள் இந்திய வீரர் தற்பொழுது ஹிந்தி கமென்டரி செய்யும் இர்பான் பதான் சென்னை டீம் மீது முழு நம்பிக்கை வைத்து பேசியுள்ளது, பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது.

” 7, 8 வது பொஷிஷனில் இருந்து யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மீண்டுவிடலாம். அவ்வாறு செய்யக்கூடிய டீம் எனில் அது சி எஸ் கே தான். நிர்வாகம் வீரர்களை அழகாக நடத்துவார்கள். நான் அந்த அணிக்காக 2015 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் வீரர்களின் கையில் தான் உள்ளது. 21 – 22 வருடங்களாக கிரிக்கெட்டை நடத்தும் நிர்வாகம். சென்னை லீக்கில் கூட இப்படி தான் அவர்களது ஸ்டைல். தன்னுடைய வீரர்களை பயன்படுத்த நன்றாகவே தெரியும். சென்று உன் ஸ்டைலில் விளையாடு என பக்கபலமாக இருப்பார்கள்.

pathan

pathan

நான் சில பல டீம்களுக்கு விளையாடி உள்ளேன். 11 .30 மேட்ச் முடியும், 2 மணிக்கு சென்று சிறிது நேரம் தூங்கிவிட்டு காலை 6 மணிக்கு பிலைட் ஏறுவோம். ஆனால் சி எஸ் கே அடுத்தநாள் மதியம் கிளம்புவது போல தான் திட்டமிடுவர். எனவே வீரர்களுக்கு நல்ல ஒய்வு கிடைக்கும். இது போன்ற சிறிய விஷயங்களில் கூட கவனம் இருக்கும்.

இத்தனை ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீம் தான் சிஎஸ்கே. அந்த அணியில் இப்போது சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லை, சிலருக்கு காயம் ஏற்பட்டதால் பின்னடைவு தான். ஆனால் அவர்களை வழிநடத்த ஐபிஎல் இந்த சிறந்த கேப்டன் தோனி இருக்கிறார். அணி இப்போது இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல தோனியால் மட்டுமே முடியும்.”

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top