Connect with us
Cinemapettai

Cinemapettai

மும்பையை அடித்து துவைத்த சி எஸ் கே! தரமான செய்கையை செய்த பாய்ஸ்

Sports | விளையாட்டு

மும்பையை அடித்து துவைத்த சி எஸ் கே! தரமான செய்கையை செய்த பாய்ஸ்

கொரானாவின் பயத்தால் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றினார்கள்.

நேற்று நடந்த போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் டீம்கள் மோதின. சென்னை அணியில் காயம் காரணமாக ப்ராவோவுக்கு பதில் சாம் கர்ரன் சேர்க்கப்பட்டார். தாஹிர் ஆடவில்லை, அவருக்கு பதிலாக நிகிடி ஆடினர். மும்பையில் போல்ட், பேட்டின்சன் மற்றும் சௌரப் திவாரி புது வரவு.

டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். டி காக் மற்றும் ரோஹித் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். சாஹர் மற்றும் நிகிடியின் ஓவர்களில் பௌண்டரிகள் சென்றது.

புதுவரவான சாவ்லா ரோஹித் 12 (10) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கர்ரன் டி காக் 33 (20) வீழ்த்தினார். திவாரி ஒரு புறம் நின்று அதிரடியாக ஆடினார், மறுபுறம் விக்கெட்டுகள் சீராக வீழ்ந்த வண்ணம் இருந்தது. திவாரி அதிகபட்சமாக 42 (32) ரன்கள் எடுத்தார். முதலில் சொதப்பிய நிகிடி கடைசி ஓவர்களில் சிறப்பாக வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். ஜடேஜா, சாஹர் இரண்டு விக்கெட்டுகளை எடுக்க, கர்ரன் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். மும்பை 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக பௌலிங்கில் சிறப்பாக ஆரம்பித்தது மும்பை. வாட்சன் 4 (5) முரளி விஜய் 1 (7) Lbw முறையில் அவுட் ஆகினர். இதில் முரளி விஜய் விக்கெட் அம்பயரின் தவறான முடிவு தான்.

டு பிளெஸ்ஸி,  ராயுடு நின்றி ஆட ஆரம்பித்தனர். 48 பாலில் 71 ரன்கள் எடுத்தார் ராயுடு. இவரையா உலகக்கோப்பை டீம்மில் சேர்க்காமல் விட்டு விட்டோம் என நம்மை யோசிக்க வைத்துவிட்டார். கடைசி வரை அவுட் ஆகாமல் டு பிளெஸ்ஸி 44 பாலில் 58 ரன்கள் எடுத்தார்.

24 பாலில் 42 ரன்கள் தேவை என இருந்தது. தோனி தான் மற்றும் ஜாதவ் இறங்காமல் ஜடேஜா 10 (5 ) கர்ரன் 18 (6 ) இருவரை அனுப்பி ரன் விகிதத்தை குறைத்தார். பின் தோனி ஆட வந்தார். அம்பயர் தவறாக கேட்ச் அவுட் கொடுக்க ரெவியூ சென்றார். நாட் அவுட் என முடிவு மாறியது.

அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருதை பெற்றார். டாடிஸ் டீம் முதல் வெற்றியை தட்டி சென்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top