fbpx
Connect with us

Cinemapettai

ஐபில் ஃபைனல் சி எஸ் கே vs மும்பை இந்தியன்ஸ். கப் ஜெயிக்க யாருக்கு வாய்ப்பு ஜாஸ்தி தெரியுமா ? அலசல் ரிப்போர்ட் ! உத்தேச 11 உள்ளே .

mi-vs-csk

Sports | விளையாட்டு

ஐபில் ஃபைனல் சி எஸ் கே vs மும்பை இந்தியன்ஸ். கப் ஜெயிக்க யாருக்கு வாய்ப்பு ஜாஸ்தி தெரியுமா ? அலசல் ரிப்போர்ட் ! உத்தேச 11 உள்ளே .

ஐபில் 12 வது சீசன் இறுதி நாளை எட்டிவிட்டது. சீசன் தொடங்கும் முன்பே கப் யார் ஜெயிக்க வாய்ப்புள்ளது என்றால் சென்னையையோ அல்லது மும்பையையோ தான் பத்தில் ஆறு நபர்களாவது சொல்லி இருப்பார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்மை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விளையாடிய 10 சீசன்களில் 8 முறை பைனல் ஆடியுள்ளனர். மும்பை டீம்மை பொறுத்தவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐந்தாவது முறை பைனல் ஆட உள்ளனர்.  2010 இல் சென்னை மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 2013 , 2015 இல் மும்பை சென்னையை தோற்கடித்துள்ளது. இம்முறை நான்காவது முறையாக பைனலில் மோத உள்ளனர்.

இந்த தொடரில் சி.எஸ்.கே – மும்பை சந்தித்த போட்டிகள் அனைத்திலும் ( இரண்டு லீக் மற்றும் ஒரு பிளே ஆப்) மும்பை தான் வென்றுள்ளது. இதுவரை, நடந்த ஐபில் போட்டிகளில் ரோஹித் – தோனி தலைமையில் மும்பையும் சி.எஸ்.கேவும் இதுவரை 16 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில், மும்பை 10 முறையும், சி.எஸ்.கே 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே ஸ்டாட்ஸ் படி மும்பையின் ஆதிக்கமே அதிகம். அமிழும் கேப்டனாக ரோஹித் இதுவரை ஐபில் பைனல் தோற்கவில்லை.

மும்பை டீம் பொறுத்தவரை ஜெயந்த் யாதவ், இடத்தில் பென் கட்டிங் சேர்ப்பதால் டீம் வலுவாகும்.

1 Quinton de Kock (wk), 2 Rohit Sharma (capt), 3 Suryakumar Yadav, 4 Ishan Kishan, 5 Hardik Pandya, 6 Krunal Pandya, 7 Kieron Pollard, 8 Ben Cutting, 9 Rahul Chahar, 10 Lasith Malinga, 11 Jasprit Bumrah

தோனியை பொறுத்தவரை டீம்மில் அதிக மாற்றம் செய்ய விரும்பமாட்டார், எனினும் க்ருனால் பாண்டியா மற்றும் சாஹர் ஸ்பின் பந்துவீச்சை சமாளிக்க முரளி விஜயை அணியில் சேர்ப்பது நல்லது. தாக்குர் பதிலாக இவர் ஆடும் வாய்ப்பு அதிகம் . மேலும் பேட்டிங் ஆர்டரில் ஜடேஜா அல்லது தீபக் சாஹர் முன் இறக்குவதும் நல்ல பலனை தரலாம்.

1 Shane Watson, 2 Faf du Plessis, 3 M Vijay, 4 Suresh Raina, 5 Ambati Rayudu, 6 MS Dhoni, 7 Dwayne Bravo, 8 Ravindra Jadeja, 9 Deepak Chahar, 10 Harbhajan Singh, 11 Imran Tahir

டெக்கினிகள் டாட்டா படி செயல் படும் மும்பை இந்தியன்ஸ், மற்றும் தோனியின் உள்ளுணர்வு படி செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்; இரு அணிகளும் மோதுவது தான் இன்றைய ஸ்பெஷல். கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் மும்பைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சென்னை ஆதரவாக பேசி வருகின்றனர். ஐபில் பொறுத்தவரை ரோஹித்தின் மும்பை மூளை என்றால் தோனியின் சென்னை இருதயம் ஆகிற்றே.

மும்பையா? சென்னையா? என்பது ஹைதராபாத்தில் இன்று இரவு தெரிந்துவிடும்.  அதுவரை காத்திருப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top