Sports | விளையாட்டு
பஞ்சாப் அணியை அடித்து விரட்டிய CSK.! மீண்டும் முதலிடம்
IPL : ஐ.பி.எல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ,மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மைதானத்தில் விளையாடி வந்தனர்.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அபாரமாக விளையாடி 160 ரன்கள் எடுத்தது. du plessis 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். தோனி 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஷேன் வாட்சன் 24 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 15 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அனைவரும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.
பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல் 55ரன்கள் 47பந்துகளில் சர்ப்ராஸ் கான் 67ரன்கள் 59 பந்துகளில் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்காட் குகலின் மற்றும் ஹர்பஜன்சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர் அதனால் 22 ரன்களில் தோல்வியை தழுவியது பஞ்சாப் அணி.
