11 வது சீசன் ஐபில் துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. எனினும் சென்னையை பொறுத்தவரை ஐபில் கொண்டாட்டம் துவங்கிவிட்டது. தோனி, ரெய்னா தொடங்கி தாஹிர், பிராவோ வரை அனைவரையும் இங்கு தங்கள் வீட்டு பிள்ளை போல் வரவேற்பு அளிப்பது தான் சென்னையில் ஸ்பெஷல்.

மேலும் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணிகளில் முதல் இடம் சி எஸ் கே விற்கு தான் செல்லும். மாலை 6 30 மணிக்கு மேல் யார் வேண்டுமானாலும் வலை பயிற்சியை சென்று பார்க்க அனுமதி அளித்துள்ளனர். அதுமட்டுமன்றி நேற்று வீரர்களை ப்ராக்டிசுக்கு ஓபன் டாப் பஸ்ஸில் அழைத்து வந்தனர். இது போல் பல வித்தியாசமான முயற்சிகளை இந்த அணி நிர்வாகம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அணி வெளியிட்ட வீடியோ ஒன்று பரவலாக ஷேர் செய்யப்படுகிறது.

இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டாரின் நெருப்பு டா வசனத்தை ஸ்டைலாக பேசுகின்றனர் நம் வீரர்கள்.