11 வது சீசன் ஐபில் போட்டிகள் நாளை துவங்குகிறது. 8 அணிகளும் முழுவீச்சுடன் தயாராகிவருகின்றனர். ஆரம்பிக்கப்ட்ட முதல் சீசனில் இருந்தே இந்த லீக்கில் அதிக ரசிகர் வட்டம் உள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். எனினும் நிர்வாவிகளின் முறைக்கேட்டால், இந்த அணியை இரண்டு வருடம் பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் இந்த வருடம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறது சென்னை அணி.

இது வரை 8 சீசன்கள் ஆடிய இந்த அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது, நன்கு முறை ரன்னர் ஆக வந்துள்ளது, இரண்டு முறை செமி – பைனல் வரை சென்றுள்ளது. தல தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டு பிளெஸ்ஸி போன்றவர்கள் இந்த நிராவகம் தக்கவைத்துள்ளது.. இந்த முறை தான் அஸ்வின் அவர்களை எடுக்கவில்லை எனினும் மாற்றாக முரளி விஜய் வந்துவிட்டார். இந்த 5 – 6 மெயின் வீரர்கள், அவர்களுடன் கரண்ட் பார்ம் அடிப்படையில் உள்ளூர், வெளிநாடு வீரர்களை சேர்த்து பாடுவதே இவர்களின் பலம்.

இந்நிலையில் இன்று மாலை இந்த அணியின் அதிகாரபூர்வ விசில் போடு வீடியோ பாடல் வெளியாகி,வைரலாகியுள்ளது.