fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த இரண்டு தான் சிஎஸ்கேவுக்கு உள்ள பிரச்சனை – சரி செய்யுமா நிர்வாகம்.? கவலையில் ரசிகர்கள்

Sports | விளையாட்டு

இந்த இரண்டு தான் சிஎஸ்கேவுக்கு உள்ள பிரச்சனை – சரி செய்யுமா நிர்வாகம்.? கவலையில் ரசிகர்கள்

மிகவும் குறுகிய காலகட்டத்தில் நடக்கும் ஐபிஎல் சீசன் இதுவாக தான் இருக்கும். 2020 சீசன் முடிந்துவிட்டது, அடுத்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் நடத்தும் வேலைகளை பிசிசிஐ ஆரம்பித்துவிட்டது. 10 டீம்கள் இருக்கும், மெகா ஏலம் நடக்கும் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் 8 டீம்களுடன் தான் போட்டிகள் நடக்கப்போகிறது. மேலும் பிப்ரவரியில் ஏலம் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சீசன் எதுமாதிரியும் இன்றி முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்  தடுமாறியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி கூட ஆகவில்லை. இந்நிலையில் சி எஸ் கே நிர்வாகம் 6 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளனர். ஒய்வு பெற்றுள்ள வாட்சன், முரளி விஜய், ஜாதவ், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங் மற்றும் மோனு குமார் சிங் ஆகியோர் தான் அவர்கள். எனவே இப்பொழுது 6 இந்தியர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என ஏழு பொசிஷன் காலியாக உள்ளது. 22 . 9 கோடி கை வசம் உள்ளது.

சுரேஷ் ரைனாவை தக்கவைத்ததன் காரணமாக மத்திய வரிசை பிரச்சனை ஒரு அளவுக்கு முடிந்துவிட்டது என கூட சொல்லலாம். எனினும் தோனி பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை எனவே மத்தியவரிசையில் ஜடேஜா, பிராவோ, கர்ரன் ஆகியோருடன் இணைந்து ஆடி, பினிஷர் ரோலுக்கு ஒரு இந்தியர் தேவை.

அடுத்ததாக ஒபெனிங்கில் ருத்ராஜ் கெய்க்வாட்/ ஜெகதீசன் இருவரில் ஒருவர் டு பிளெஸ்ஸி உடன் இறங்குவர், எனினும் பேக் அப் வீரர் ரோலுக்கு ஒரு வெளிநாட்டு அல்லது இந்திய ஒபெனர் தேவை. கட்டாயம் சென்னை நிர்வாகம் வெளிநாட்டு வீரர் ஒருவரை எடுத்து, அந்த ஸ்லாட்டை நிரப்ப வாய்ப்புள்ளது.

டீமின் மிகப்பெரிய தலைவலி மற்றும் பிரச்சனை என்பது இந்திய ஸ்பின்னர் ரோலுக்கு தான், அதிலும் குறிப்பாக டீம் வசம் ஆப் ஸ்பின்னர் இல்லை. லெக் ஸ்பின் வீச கரண் சர்மா மற்றும் தாஹிர் உள்ளனர். மேலும் இடது கை ஸ்பின்னர் ரோலுக்கு ஜடேஜா, சாட்னார், சாய் கிஷோர் உள்ளனர். ஆப் ஸ்பின் வீச ரெய்னா மட்டுமே உள்ளார். சாவ்லா, ஹர்பஜனையும் ரிலீஸ் செய்துவிட்டனர், எனவே இந்திய ஆப் ஸ்பின்னர் டீமுக்கு மிக அவசியம்.

ஒபெநிங் கூட கர்ரன், டூபிளெஸ்ஸி, ராயுடு, கைக்கவாட், ஜெகதீசன் என வைத்து சமாளிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய வரிசையில் தரமான அதிரடி பினிஷர் மற்றும் ஆப் ஸ்பின் பௌலர் என இந்த இரண்டு பொசிஷனுக்கு தான் ஆட்கள் கட்டாயம் தேவை.

chennai super kings

chennai super kings

தோனி குறைந்த விலையில் ஹர்பஜன் மற்றும் ஜாதவ் இருவரையும் மீண்டும் ஏலத்தில் எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். காத்திருப்போம் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறது என பார்ப்பதற்கு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top