Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழக சிங்கம் அஸ்வின் அவுட்.! கொதிக்கும் ரசிகர்கள்!

IPl 11வது சீசன் தொடங்க உள்ள நிலையில் மூன்று வீரர்களை அந்தந்த அணி நிர்வாகம் தக்க வைத்து கொள்ளலாம். முதல் வீரருக்கு 15கோடியும் (தோனி),இரண்டாவது வீரருக்கு 12கோடியும்(ரெய்னா)மூன்றாவது வீரருக்கு( 7கோடி) என அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிறுக்கும் 80 கோடியில் வீரர்களை வாங்கி கொள்ளலாம்.

ஒரு வேலை இந்த விலையை விட தான் அதிகம் விலை போவேன் என்று வீரர் நினைத்தால் அந்த அணியை விட்டு விலகலாம். மேலும் 3வீரர்களை தக்கவைத்து கொள்வது போல 2வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

அப்படி தக்கவைக்கும் பட்சத்தில் 3கோடியை போட்டியை நடத்தும் அமைப்புக்கு கொடுக்க வேண்டும். அந்த வீரருக்கு 3கோடி சம்பளம் வழங்கப்படும் ஒரு வேலை அந்த வீரருக்கு அந்த விலை குறைவு என்று கருதினால் விலகி கொள்ளலாம்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது தோனி,ரைனா,ஜடேஜா ஏன் அஸ்வினை தக்கவைக்க தவறியது?.நம்ம ஊர் அணிக்காக நம்ம ஊர் வீரர்கள் விளையாடினால் நாம் கொண்டாட முடியும்.

தற்போது தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள் விஜய், கார்த்தி, அஸ்வின், சுந்தர் மற்றும் விஜய் சங்கர் இதில் ஒருவரை கூட நம்ப ஊர் அணி வாங்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் 9வருடங்களாக தொடர்ச்சியாக பந்து வீசி உள்ளார் இருப்பினும் ஏன் அவரை தேர்ந்தெடுக்க வில்லை?. ஒரு வேலை அவருடைய பந்து வீச்சல் சோர்வா அதுவும் இல்லை.

ஒரு வேலை ஏலத்தில் போது தக்க வைத்து கொள்ள தீவிரம் காட்டலாம். ஒரு வேலை அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தரை சென்னை அணி வாங்க நினைக்கலாம்.

வயது குறைவு நல்ல பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங்,பீல்டிங் இதனை காரணமாக இருக்கலாம் அஸ்வினை கழற்றி விட. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு போக கூடிய வீரர் வாஷிங்டன் சுந்தர் தான் கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

நாம் என்ன தான் CSKமற்றும் தோனி வெறியறாக இருந்தாலும் ஒரு தமிழன் அணியில் ஆடாமல் இருக்கும் பட்சத்தில் CSK அணிக்கு விசல் போடுதை நிறுத்தி விட்டு. நம் வீரர்கள் எந்த அணிக்கு விளையான்டாலும் நம் ஆதர்வை தெரிவிக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top