நேற்று நடந்த IPL போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் சென்னை அணி மோதியது இதில் தாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, ராஜஸ்தான் அணியின் பந்துகளை போலந்து கட்டினார் வாட்சன், மேலும் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை அடைந்தது.

CSK

IPL அணிகளில் சென்னை அணியை சீனியர் அணி என்றும் அங்கிள்ஸ் அணி என்றும் பயங்கரமாய் கலாய்த்தவர்களுக்கு தங்களது தொடர் வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்கள் சென்னை அணி.

இந்த நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இந்த வெற்றி குறித்து பேசியுள்ளார் இம்ராம் தாஹிர் ” வாட்சனிடம் இருந்து என்ன ஒரு அற்புதமான ஆட்டம் சென்னையில் இருந்து பல வழிகளில் புனேவுக்கு வந்து ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.மஐம் ஹபஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டு கலக்கியுள்ளார்.

பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை”. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை!நீங்க வேற லெவல் மாஸ் யா @ChennaiIPL @CSKFansOfficial அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் #pune get ready

“யாதும் ஊரே யாவரும் கேளீரென்ற” வரிக்கேற்ப, தானே புயலைப்போல் பூனேவில் மைய்யங்கொண்ட என் தமிழ் ரத்தங்களே , கண்டங்கடந்து தனக்கான இடமடையும் சிறகுகளைப் போல, உங்களின் அன்பு கண்டு மொத்த @ChennaiIPL அணியும் சில்லாய்த்தது.நமது வெற்றியை கொண்டாடுங்கள்.சிங்க பாய்ச்சல் @ShaneRWatson33