Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிஎஸ்கேவை ஆட வைத்த தல அஜித்.. வெளியான சுவாரசிய தகவல்

ஐபிஎல்லில் சிறந்த அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் மீது தான் அதிக லவ்ஸ் என்ற புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கிரிக்கெட் உலகின் சக்சஸ்புல் கேப்டன்களுள் முக்கியமானவர் தோனி. இவர் தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் அதே அளவு புகழை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது. சூதாட்ட புகாரால் இந்த அணிக்கு ஐபிஎல்லில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஐபிஎல்லில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
இதை தொடர்ந்து, இந்தாண்டு வெற்றிகரமான அணியாக ரெய்னா, ஜடேஜா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், ராயுடு, வாட்சன் உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்துக்கொண்டு களமிறங்கியது. முதலில் வயது மூத்த அணி என கலாய்க்கப்பட்டதற்கு முதல் ஆட்டத்திலேயே பதிலடியை பக்காவாக கொடுத்து வாயடைக்க செய்தது. லீக்கில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதில் உள்ளிறங்கிய சென்னை, அங்கும் வெற்றியையே தன் வசமாக்கியது. இறுதியாக ரசிகர்களின் ஆசைப்படி இந்த வருட கோப்பையை தட்டி தூக்கி இருக்கிறது.
இந்நிலையில், இந்த அணி குறித்த ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணி வீரர்களின் விளையாட்டு போலவே அவர்களின் ரகளைகளும் மக்கள் மத்தியில் படு பேமஸாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஒரு போட்டி முடிந்து ஹோட்டலுக்கு பஸ்ஸில் வீரர்கள் பயணம் செய்வார்கள். அப்போது, ரெய்னா மட்டும் ட்ரைவரிடம் மெதுவாக வந்து அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலை ஒவ்வொரு முறையும் போட சொல்லுவாராம். பாடல் ஒலிப்பரப்பிய அடுத்த நொடி பஸ்ஸில் இருக்கும் அனைத்து வீரர்களும் களைப்பு மறைந்து குத்தாட்டம் போடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை அவர்கள் பயணம் செய்யும் வண்டியும் ட்ரைவரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கோலிவுட்டின் கிங் மேக்கராக இருக்கும் அஜித்தை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சிஎஸ்கே வீரர்களுக்கே பிடித்து இருக்கிறது. இது தல ரசிகர்களை மேலும் குஷியில் ஆழ்த்தி விட்டது.
