fbpx
Connect with us

Cinemapettai

ஐபில் 2019 – சி எஸ் கே அணியின் பலம், பலவீனம். மீண்டும் கோப்பையை வெல்லுமா ? ஒரு அலசல் ரிப்போர்ட்.

csk-chenna-ipa-2019-team

Sports | விளையாட்டு

ஐபில் 2019 – சி எஸ் கே அணியின் பலம், பலவீனம். மீண்டும் கோப்பையை வெல்லுமா ? ஒரு அலசல் ரிப்போர்ட்.

சம்மர் கொண்டாட்டமான ஐபில் இன்று மாலை தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

விஸ்வாசமான ரசிகர்கள் அதிகம் உடைய டீம் என்றால் அது சி எஸ் கே தான். சென்னை, தமிழ் நாடு தாண்டி இந்திய அளவில், உலக லெவெலில் அதிக ரசிகர் வட்டம் உடைய டீம். அதற்கேற்றார் போல டீம் உரிமையாளர்களும் ரசிகர்களை மதிக்கும், கவனிக்கும் விதமும் சூப்பர் தான். சென்ற சீசன் போட்டிகள் புனேவுக்கு மாற்றிய சமயத்தில் ரயில் ஏற்பாடு செய்து மேட்ச் பார்க்க ரசிகர்களுக்கு உதவியது, ப்ராக்டிஸ் செஷனை பார்க்க அனுமதிப்பது என தருமாறு வகையறா இந்த கூட்டணி.

எப்பொழுதுமே ஐபில் பொறுத்தவரை கப் அடிக்கும் ஹாட் பாரிட் டீம் சி எஸ் கே வும் தான். பிளெமிங் தலைமை பயிரிச்சியாளர். மைக் ஹஸி பேட்டிங் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி பௌலிங் கோச்சு. தல தோணி கேப்டன், சின்ன தல ரெய்னா துணை கேப்டன்.

பலம்

சென்ற சீசனில் அசத்தினார் தோனி. நான்காம் இடத்தில இரங்கி வெளுத்து வாங்கினார். சென்ற சீசன் 16 – 20 ஓவர்களில் தோனி 118 பந்துகள் எதிர்கொண்டு 252 ரன்கள் குவித்தார்.

ஷேன் வாட்சன், பிராவோ, டுப்லெஸி, ரெய்னா, ஹர்பஜன், தாஹிரின் அனுபவம் இந்த டீமுக்கு மிக பெரிய பிளஸ்.

சென்ற சீசன் 8 சி எஸ் கே பிளேயர் தங்களுக்குள் 11 முறை மேன் ஆப்தி மேட்ச் விருதை தட்டி சென்றுள்ளனர்.

இம்முறை சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நாடாகும் என்பதால் ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா, சாட்னர், கரண் சர்மா, ஜாதவ் ஆகியோரின் ஸ்பின் பந்துவீச்சில் எதிர் அணி சிக்க தான் போகிறது.

CSK

பலவீனம்

வாட்சன், பிராவோ, ஜாதவ், ராயுடு போன்ற சீனியர் வீரர்களின் பிட்னெஸ் பற்றியும் பார்த்தே ஆக வேண்டும். இவர்களில் யார் யார் 100 சதவிகிதம் பிட்னெஸ் உடன் முழு சேஷனும் ஆடுவர் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சென்ற சீசனில் பிராவோ சுமாராகவே செயல்பட்டார். 16 – 20 ஓவர்களில் இவரின் ரன் விகிதம் 12 . 12 . மேலும் நிகிடி வேறு காயம் காரணமாக விளகியுள்ளார்.

இரண்டாம் பாதியில் எந்தெந்த வெளிநாடு பிளேயர் நாடு திரும்புவர் என்பதும் முக்கிய விஷயம். டூபிளெஸ்ஸி, தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) டேவிட் வில்லி, சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து) சாட்னர் ( நியூஸிலாந்து) மற்றும் தோனி, ஜாதவ், ராயுடு, ஜடேஜா என தங்கள் நாட்டின் உலக கோப்பை அணியில் கட்டாயம் இடம் பிடிக்கும் வீரர்கள் நிலை என்னவாகும் என்பது பெரிய மைனஸ் தான்.

வழக்கம் போலவே பேட்டிங் சூப்பர் ஸ்ட்ராங் எனினும் வேகப்பந்துவீச்சு சற்றே பலவீனம் தான். மீண்டும் கம் பேக் கொடுத்துள்ள மோஹித் சர்மா நன்றாக செயல் படும் விதத்தில் இந்த டீமுக்கு அது பலமாக அமையும்.

உத்தேச XI

1 Shane Watson 2 Ambati Rayudu 3 Suresh Raina 4 Faf du Plessis 5 MS Dhoni (capt & wk), 6 Kedar Jadhav, 7 Dwayne Bravo, 8 Harbhajan Singh , 9 Imran Tahir, 10 Ravindra Jadeja 11 Mohit Sharma

அலசல் ரிப்போர்ட்

ஆரம்ப நாட்களில் வெளிநாடு பிளேயர்களை ரொட்டேட் செய்து, கடை கடவென்ன வெற்றியை குவித்து, பிளே – ஆப் சுற்றுக்கு எளிதில் வழக்கம் போல தகுதி பெற்று விடும் இந்த டீம்.

எனினும் வெளிநாட்டு வீரர்கள் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் இரண்டாம் பாதியில் வெளியேறுவர். அந்த சமயம் அணிக்கு சிக்கல் தான்.

csk

7 வெளிநாடு வீரர்கள் உள்ளனர். தாஹிர், டூபிளெஸ்ஸி, சாட்னர் கட்டாயம் உள்கோப்பை டீம்மில் ஆடுவர். மேலும் பில்லிங்ஸ், வில்லி சித்தம் பிடிப்பதும் உறுதி தான். அப்படியெனில் பிராவோ, வாட்சன் மட்டுமே மிஞ்சுவர். ஆல் – ரௌண்டார்கள், சீனியர் பிளேயர்கள் வேறு, எனவே காயம் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.

ஆக மொத்தம் இரண்டாம் பாதி ஐபில் இல் இந்திய வீரர்களை தான் அதிகம் நம்பும் சூழல் ஏற்படும். விரைவில் இவர்கள் லுங்கி நிகிடிக்கு மாற்றாக வீரர் எடுக்க வேண்டும். அதே போல் நம் உலக்கோப்பை டீம்மில் உத்தேச வீரர் பட்டியலில் உள்ள ராயுடு, ஜாதவ் பிட்னெஸ் பற்றயும் பார்வை வேண்டும். ( தோனி, ஜடேஜா பற்றி அதிகம் கவலை தேவை இல்லை)

எப்படி பார்த்தாலும் முரளி விஜய், கரண் சர்மா, தாக்குர், சாஹர், ஜெகதீசன் போன்ற இந்திய வீரர்கள் கடைசி சில போட்டிகளில் அச்சத்தினால் மட்டுமே கப் வெல்லும் வாய்ப்பு அமையும் இந்த டீமுக்கு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top