ஐ.பி.எல் டி.20  தொடரின் அடுத்த சீசனில் புனே மற்றும் குஜராத் அணிக்கு பி.சி.சி.ஐ குட் பை சொல்ல இருப்பதை பி.சி.சி.ஐ செயலாளர் ராகுல் ஜோரி உறுதிபடுத்தியுள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் ஹீரோவாக திகழ்ந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சூதாட்ட புகாரில் சிக்கியதால் இரு அணிகளும் ஐ.பி.எல் தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டன.

இரு அணிகள் மீதான தடை இந்த ஆண்டோடு நிறைவடைவதால் அடுத்த தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இரு அணிகளும் மீண்டும் களமிறங்கும் பட்சத்தில் கடந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகள் ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த தகவலை பி.சி.சி.ஐ செயலாளர் ராகுல் ஜோரி உறுதிபடுத்தியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் புனே மற்றும் குஜராத் அணிகளுக்கு பதிலாக சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளை வரவேற்க பி.சி.சி.ஐ தயாராக உள்ளதாகவும் ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.