Sports | விளையாட்டு
சி.எஸ்.கே! வயதான, வலுவான, ஷார்ப்பான ராஜாக்களாக மீண்டும் வருகிறார்கள். முழு டீம் விவரம் உள்ளே
மீண்டும் வரும் சிஎஸ்கே. முழு டீம் விவரம்
ஐபில் 2019
இந்தியாவில் பல நாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் ஐபிஎல் டி20 தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் கொண்டாட்டத்துக்கு டீம்கள் தங்களை ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டனர். வரும் சீசன் தேர்தல் காரணமாக இந்தியாவில் நடப்பதற்கான சாத்தியம் குறைவே. தென்னாப்பிரிக்கா அல்லது துபாயில் நடக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் சில அணிகள் பயிற்சியாளர்களை மாற்றியது. ட்ரான்ஸபார் அனைத்து அணிகளுக்கும் செய்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கியது. தவான் டெல்லி அணிக்கு மாறினார். விஜய் ஷங்கர் சன்ரைசர்ஸ் திரும்பினார். மந்தீப் சிங் பஞ்சாப் செல்கிறார். ராஜஸ்தான் ஜெயதேவ் உனட்கட் அவர்களை ரிலீஸ் செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
டி20 போட்டியில் முன்னணி அணியாக தொடர்ந்து தக்க வைத்து வரும் ஒரே அணி நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகும். போன ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை வாங்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.
Wishing a super roar ahead for the lions Kanishk Seth and Kshitiz Sharma! #EverywhereYouGo – Roar loud Whistles! #WhistlePodu ?? pic.twitter.com/T35GaZqFq6
— Chennai Super Kings (@ChennaiIPL) November 14, 2018
சி.எஸ்.கே நிர்வாகம் என்ன செய்துள்ளது என பார்ப்போம். கனிஷ்க் சேத் மற்றும் கிஷிட்ஸ் சர்மா என்ற இளம் வீரர்கள் மற்றும் இங்கிலாந்தின் மார்க் வுட் என இந்த மூவரையும் ரிலீஸ் செய்து விட்டனர்.
Dearest #BrotherMark, your few weeks with the Pride will be etched in every #yellove hearted fan's memories immortalised forever in the form of some of the very best songs. Nandri very much! ?? #DuDuDuRayudu #EverywhereWeGo https://t.co/GZFwSuuwKA
— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2018
இந்நிலையில் சென்னை அணி, அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான அணியில் இவர்கள் தக்க வைத்துள்ள 23 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

csk
மீண்டும் ஏலத்தில் மற்ற வீரர்களை எடுப்பார்கள். 8.40 கோடி பணம் உள்ளது இவர்களிடம். சென்ற சீசன் பாலன்ஸ் 6.5 கோடி மற்றும் புதிதாக இந்த சீசனுக்கு 2 கோடி’
Older, stronger and sharper! The Pride is Back! #SummerOf19 #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/4hQUvMlBU7
— Chennai Super Kings (@ChennaiIPL) November 16, 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இருந்த ஹர்பஜன்சிங் போன் ஆண்டு சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அதன்பிறகு அவர் சென்னை அணி மீது மிகுந்த பாசமாக உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய், அஜித் வசனங்களை பயன்படுத்தி ஒரு டுவிட் செய்துள்ளார்.
தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா!
வோர்ல்டு மொத்தமும்
அரளவுடனும் பிஸ்து.
பிசுறு கெளப்பி
பெர்ளவுடனும் பல்து.Delighted to be retained for 2019 @ipl @CSKFansOfficial pic.twitter.com/ztubvy1u9F— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 15, 2018
ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அதற்கான வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்காக வாங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த சென்னை அணி கடந்த ஆண்டு கோப்பையை பெற்றது அடுத்து மீண்டும் அதே அணியுடன் சேர்ந்துள்ளதாக கூறியுள்ளார் இது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார்.
