ஐபில்

11-வது ஐபில் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது.
இந்த வருடமும் வழக்கம் போல 8 அணிகள் மோதுகின்றன. இரண்டு ஆண்டு தடை முடிந்த பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்து வழக்கம் போல பஞ்சாப், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதெராபாத் அணிகளும் விளையாடவுள்ளனர்.( புனே மற்றும் குஜராத் அணிகள் கிடையாது)

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி முழு வீச்சில் தன் ரீ என்ட்ரிக்கு தயாராகி வருகின்றது. டோனி தலைமையில், அஸ்வின் தவிர்த்து கிட்ட தட்ட மற்ற அணைத்து வீரரும் திரும்பிவிட்டனர். மேலும் புதிதாக ராயுடு, ஹர்பஜன், ஜாதவ், முரளி விஜய் போன்றவர்களும் இணைந்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பல வீரர்கள் சென்னை புகுந்த வீடு தான். சில நாட்களாக்கவே பல புதிய விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் என அசதி வருகின்றனர். இந்நிலையில் ஏர்செல் நிறுவனத்திற்கு மாற்றாக “தி முத்தூட் பைனான்ஸ்” குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

CSK

ஏப்ரல் 7 துவங்கும் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்ற வருடம் வரை மும்பைக்கு ஆடிய ராயுடு மற்றும் ஹர்பஜன் சென்னை அணிக்கு இம்முறை களம் இறங்குவார்கள். ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here