ஐபில் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை மோதின. மேலும் இதில் கடைசி ஒவேரில் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது பிராவோ மற்றும் ஜாதவ் தான் முக்கிய காரணம். இந்நிலையில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் ஜாதவ் அணியில் இருந்து வெளியேறுவதாக தகவல்கள் வந்துள்ளது.

166 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான . வாட்சன் 16 ரன்கள் ராயுடு 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா (4 ரன்) , தோணி (5 ரன்) மட்டுமே எடுத்து வெளியேறினார். ஒரு புறம் விக்கெட் சரிய, கேதார் ஜாதவ் காலில் தசைப்பிடிப்பால், ரன் ஓட முடியாமல் ரெட்டையர்டு ஹுர்ட் முறையில் வெளியேறினார்.

Bravo CSK

கடைசி ஐந்து ஓவரில் 60 ரன் தேவைப்பட்டது, சென்னை அணி கைவசம் மூன்று விக்கெட் தான் இருந்தது( ஜாதாவையும் சேர்த்து). பின்னர் டுவெய்ன் பிராவோ அதிரடியாக விளையாட தொடங்கினார். 30 பந்துகளை மட்டுமே சந்தித்த பிராவோ 68 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.பும்ராஹ் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 19 ஓவர் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

கடைசி விக்கெட்டாக ஜாதவ் மீண்டும் இறங்கினார், மறுமுனையில் இம்ரான் தாஹிர். 6 பந்துகளில் 7 எடுத்தால் வெற்றி இன்றைய நிலையில் பங்களாதேஷின் முஸ்தபிஸுர் ரஹ்மான் பந்து வீசினார். முதல் மொன்று பந்துகளில் ரன் எடுக்கவில்லை. எனினும் நான்காவது பந்தில் ஸ்கூப் முறையில் 6 அடித்தார் ஜாதவ். பின்னர் அடுத்த பந்தில் 4 அடித்தார்.

CSK JADHAV TAHIR

மேலும் தசைப்பிடிப்பு காரணமாக சில போட்டிகளை மிஸ் செய்யவார் ஜாதவ் என்று நினைத்த நிலையில், ஐபில் தொடர் முழுவதும் இவர் ஆடமாட்டார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரேட் 2 ஹாம்ஸ்டரிங் பிரச்சினையே ஜாதவ் அவர்கள் வெளியேற காரணம். பத்திரிகையாளர்களை சந்தித்த பேட்டிங் கோச் ஹஸ்ஸி இந்த தகவலை சொன்னார். மேலும் மாற்று வீரர் யார் என இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சினிமாபேட்டை கிசு கிசு

ஏலத்தில் 7.8 கோடி கொடுத்து ஜாதவை எடுத்து சென்னை அணி. தற்பொழுது உள்ள சூழலில் முரளி விஜய், வாட்சனுடன் ஒபெநிங் இறங்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் ராயுடு மத்திய வரிசையில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.