அடுத்த ஆண்டு IPL-க்கு சிஎஸ்கே குறிவைக்கும் புதிய 5 வீரர்கள்.. மீண்டும் வயதனாவர்களா.? வெறுப்பில் ரசிகர்கள்!

இது வரை இல்லாத அளவிற்கு சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் படுதோல்வியை தழுவியது. பல ஆண்டுகளாக கட்டி வைத்திருந்த சாதனையையும் இழந்தது. இத்தனை வருடமும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற பெருமையை இழந்துவிட்டது.

சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி அடுத்த ஆண்டு புதிய அணியை உருவாக்க போகிறோம் என்று கூறியுள்ளார். 2021 ஆண்டு மிகப்பெரிய ஏலம் நடக்க போகிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி அந்த ஏலத்தில் கீழே குறிப்பிடப்பட்ட வீரர்களை எல்லாம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

ஹனுமா விஹாரி : இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்கும் இவர் டி20 போட்டி களிலும் நன்றாக ஆடுவார். சுரேஷ் ரெய்னா அடுத்த வருடம் சென்னை அணிக்காக ஆடுவாரா இல்லையா ?என்று தெரியாத பட்சத்தில் இவரை சென்னை அணியில் எடுக்க கண்டிப்பாக அந்த அணி நிர்வாகம் முற்படும் என்று தெரிகிறது.

காலின் மன்றோ : நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மன்றோ. இவர் தொடக்க ஆட்டக்காரர். சென்னை அணியில் தொடக்கம் மோசமாக உள்ளது,இதனால் அவர்கள் காலின் மன்றோவை குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

மிட்செல் ஸ்டார்க் : ஐபிஎல் தொடரில் முதல் ஸ்டாக் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேவை. இதன் காரணமாக இவரை எப்படியாவது அந்த அணி எடுக்கும் என்று தெரிகிறது.

அடில் ரஷித் : இம்ரான் தாஹிர் மற்றும் பியூஸ் சாவ்லா இருவரும் இந்த ஆண்டு பெரிதும் சொதப்பினர். அதனால் சென்னை அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த அடில் ரஷித்தை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மார்ட்டின் கப்டில் : இவரும் ஐபிஎல் தொடரில் பெரிதாக ஆடாத வீரர். சென்னை அணிக்கு ஒரு மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரர் தேவை ஒரு பக்கம் முன்றோ மறுபக்கம் மார்ட்டின் கப்டில் ஆடினால், சென்னை அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.

csk vs rcb