இரண்டு ஆண்டு தடை முடிந்து கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கு பிறகு தோணி தலைமையில் களம் இறங்கியது சி எஸ் கே. மும்பையில் முதல் போட்டி, சென்னையில் இரண்டாம் போட்டி. இரண்டிலும் மாஸ் வெற்றி பெற்றது இந்த அணி.

காவிரி வேளாண்மை அமைக்க வேண்டும் என்றும், அது வரை ஐபில் போட்டிகள் சென்னையில் நடத்த கூடாது என ஆரம்பம் முதலே பல திசைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. போட்டியின் பொழுது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தீடீர் என கூச்சலிட்டு தங்கள் காலணிகளை மைதானத்தினுள் வீசினர். உடனே அங்கு பரபரப்பு ஆனது. போலீஸ் விரைந்து அவர்களை கைது செய்தனர். ஜடேஜா மற்றும் டு பிளெஸ்ஸி, அந்த காலணிகளை அப்புறப்படுத்தினர். செல்போன் தவிர்த்து வேறு வெளி உணவு, தண்ணீர் பாட்டில், பாணர், என எதுவும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிபிடித்தக்கது.

இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் கமிஷனர் அவர்களை சந்தித்து பேசினார்கள், அதன் பின் ஏப்ரல் 20 நடைபெற இருந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. பின்னர் பிசிசிஐ போட்டிகள் புனேவில் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்நிலையில் சென்னைக்கு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பிரிய விடை கொடுத்த சில வீரர்களின் தொகுப்பே இந்த பதிவு ..

ஹர்பஜன் சிங்

Imran Tahir
இம்ரான் தாஹிர்

சென்னைய விட்டு வெளியேறுவது வருத்தமாக உள்ளது. இங்கு நல்ல வரவேற்பும், அதீத அன்பும் கிடைத்தது. மீண்டும் அடுத்த சீசன் வருகிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை. என்றென்றும் அன்புடன் உடன் பிறவா சகோதரன். வேட்டைக்கு ரெடியா ?”

ஷான் வாட்சன்

வருத்தமாக உள்ளது இனி இந்த சீசன் இங்கு ஆடமாட்டோம் என்பதால். சென்ற மேட்ச் சூழல் தாறுமாறாக இருந்தது. தமிழ்நாட்டில் நிலை சீக்கிரம் சரியாக்கட்டும்.”

சின்ன தல சுரேஷ் ரெய்னா

“சென்னையில் விளையாடுவதை மிஸ் பண்ணுவோம். ரசிகர்களை மகிழ்விக்க முடியவில்லை. என்றும் எங்கள் நெஞ்சில் நீங்க இருப்பீங்க. புனேவை நோக்கி …”

CSK
பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி

சென்னையை விட்டு வெளியேறுகிறோம். வீரக்கல் மற்றும் ரசிகர்களை நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. எனினும் அமைதியான முறையில் உங்கள் பிரச்சனைக்கு விரைவில் பதில் கிடைக்க வேண்டும். உங்களின் ஆதரவுக்கு நன்றி.

கோச் பிளெமிங்

இன்று மனவருத்தத்துடன் சென்னையி விட்டு கிளம்புகிறேன். மீண்டும் இங்கு வந்து உங்களின் அன்பு மற்றும் சி எஸ் கே மீது நீங்கள் வைத்துள்ள பாசத்தை அனுபவித்தேன். உங்களின் பிரச்சனைக்கு அமைதியான உடன்படிக்கை விரைவில் வரவேண்டும். அனைவருக்கும் நன்றி.

Sam Billings
சாம் பில்லிங்ஸ்

அன்றை மாட்ச் சூழல் மறக்கமுடியாத அனுபவம். கிரிக்கெட் பார்க்க வந்துவிட்டு ஹாஸ்பிடலில் சேரும் நிலை வரக்கூடாது. அந்த ரசிகரின் நினைவாகவே உள்ளது. விரைவில் அவர் குணம் அடையவேண்டும், உங்கள் ப்ராபளத்துக்கும் பதில் கிடைக்கட்டும். உங்களின் ஆதரவு எங்களுக்கு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.