11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரண்டு வருடம் கழித்து தன் தன் ரீ என்ட்ரிக்கு சி எஸ் கே டீம் முழு வீச்சில் தயாராகி வருகின்றது. ஒருபுறம் பயற்சயில் ஈடுபட்டும் வருகின்றனர். மறுபுறம் விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் நிகழ்ச்சிகள் என அசத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் ட்விட்டர் கணக்கில் தான் நேற்று இந்த அவெஞ்சர்ஸ் ஸ்டைல் போட்டோவை அப்லோட் செய்துள்ளனர்.

CSK

இந்த போட்டோவில் இருப்பவர்கள் முரளி விஜய், ட்வயன் பிராவோ, கரண் சர்மா, தோணி, ஷான் வாட்சன், ஷரத்துல் தாக்குர் ஆகும். இந்த போட்டோ வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் ரசிகர்களை கவருவதற்காக மாலை 6 30 மணியிலிருந்து வீரர்கள் வலைபயிற்சயில் ஈடுபடுவதை பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இன்றை மாலை கூட வீரர்கள் மைதானத்துக்கு ஓபன் டாப் பஸ்ஸில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK
இதோ வீடியோ லிங்க்

ஆக மொத்தத்தில் சென்னை ரி என்ட்ரிக்கு ரெடியாகி விட்டது.