Sports | விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்படும் முக்கிய வீரர்கள்.. சூடுபிடிக்கும் ஐபிஎல்
வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
சென்னை மட்டுமின்றி தோனி எங்கு விளையாட சென்றாலும் அங்கே அதிக அளவு சிஎஸ்கே ரசிகர்களை காணப்படுவர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்படும் வீரர்கள் மற்றும் ஏலத்திற்கு அனுப்பப்படும் வீரர்கள் என லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
அந்த வகையில் தற்போது சென்னை அணி மும்முரமாக இறங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அம்பத்தி ராயுடு அணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவரைத் தொடர்ந்து முரளி விஜய், கேதர் ஜாதவ், ஷர்துல் தகூர் போன்றவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களிடையே புதிதாக அணிக்குள் வரும் வீரர்கள் யார் என தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை அதிகமுறை பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
