fbpx
Connect with us

Cinemapettai

மரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.

Sports | விளையாட்டு

மரண மாஸ் மோஹித் சர்மா, இந்த தகுதியை பூர்த்தி செய்த காரணத்தால் தான் அணியில் எடுத்தோம். சி எஸ் கே வின் நக்கல் ட்வீட்.

ஐபில் 2019 வரும் சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூர் நகரில் மதியம் 3 . 30 மனையில் இருந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் முதல் செக்ஷன் முடிந்துள்ளது. யுவராஜ் சிங், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்ட்டின் குப்தில், ப்ரெண்டன் மக்களும், போன்ற வீரர்களை எந்த அணியும் எடுக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சி எஸ் கே இரண்டு வருட தடை முடிந்த பின் மீண்டும் கம் பேக் கொடுத்தது. பல அணிகள் புதிய கேப்டன், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க, சென்னை மட்டும் வித்தியாசமான ஸ்ட்ராட்டஜி பயன் படுத்தியது. அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஹர்பஜன், ராயுடு, ஜாதவ், வாட்சன் என எடுத்தனர். முதியோர் கிரிக்கெட் என்று கூட கிணடலுக்கு உள்ளது சீசன் துவங்குவதற்கு முன்.

csk

எனினும் எந்த இளம் டீமுக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து, தோனி தலைமையில் கோப்பையை வென்றனர் . வயதான, வலுவான, ஷார்ப்பான அணி என்றும் நிரூபித்தனர்.

மோஹித் ஷர்மா

8.40 கோடி பணத்துடன் துவங்கிய ஏலத்தில் மோஹித் ஷர்மாவை
5 கோடிக்கு எடுத்தனர். பின்னர் சில நிமிடங்களில் தங்கள் ட்விட்டரில் குசும்பாய் ஒரு ட்வீட் தட்டினார்கள்.

“மீண்டும் மோஹித் ஷர்மாவை அணியில் வரவேற்கிறோம். நல்லவிதமாக இந்த செப்டம்பரில் நம் அணியின் தகுதி அளவை பூர்த்தி செய்தார். 30 வயதை கடந்துவிட்டார் . விசில் போடு ” என்பதே அந்த ட்வீட்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top