Connect with us

Sports | விளையாட்டு

நாடி, நரம்பு, இரத்தத்தில் சிஎஸ்கே வெறி ஏறுனவர்- ஒரே டீவீட்டில் ரசிகர்கள் மனதை கவர்ந்தது யார் தெரியுமா

இந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதே நிஜம். ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை கோட்டை விட்டு தடுமாறி வருகின்றனர். 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்விகளுடன் பரிதாபமான நிலையில் உள்ளனர்.

டாடிஸ் டீம் என அனைவரும் கிண்டல் செய்தாலும், வெற்றிகளை தட்டி செல்வதில் வல்லவர்களாக இருந்தவர்கள். ஆனால் அந்தோ பரிதாபம் என சொல்லும் சூழல் தான் வந்துள்ளது.

சீசன் துவங்கும் முன்பே ரெய்னா, ஹர்பஜன் விளக்கினர். சுமாரான பீல்டிங், மற்றும் பேட்டிங்கில் அதிக டாட் பால்ஸ் இவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிட்டது. அதுமட்டுமன்றி பிராவோ, ராயுடு பிட்னெஸ் காரணமாக தவிக்கின்றனர். வாட்சன், ஜாதவ் ஆல் ரௌண்டார் என இல்லாமல், பேட்ஸ்மான் ரோலில் விளையாடி வருகின்றனர். தோனியும் பினிஷர் ரோலில் சொதப்புகிறார்.

டூபிளெஸ்ஸி, வாட்சன், கர்ரன், ஜடேஜா, தாக்குர் ஆகியோர் உதவியில் தான் டீம் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நாட்களாகவே ரசிகர்களின் கேள்வி இம்ரான் தாஹிர் ஏன் டீம்மில் இல்லை என்பதே. தாஹிர் பவர் பிளே சமயத்திலும் பந்து வீசுவார். தனது பந்து வீச்சு மட்டுமன்றி, அடுத்த பௌலர்களுக்கும் டிப்ஸ் கொடுத்து ஊக்கப்படுத்துவார். மேலும் இவர் மைதானத்தில் உள்ள நேரத்தில் என்றுமே துறுதுறுவென இருப்பவர். டீம் ஸ்பிரிட் உள்ள மனிதர்.

imran tahir

பலரும் நீங்கள் ஏன் டீம்மில் இல்லை என பேசியதற்கு, மிகவும் அழகான பதிலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தாஹிர்.

“நான் விளையாடும் சமயத்தில் நிறைய வீரர்கள் எனக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இன்று தகுதி வாய்ந்த வீரர்கள் விளையாடும் பொழுது நான் கொண்டு செல்வது எனது கடமை. நான். நான் விளையாடுகிறேன் அலல்து இல்லை என்பது இங்கு முக்கியமில்லை. டீம் ஜெயிக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது நான் சிறந்த பங்களிப்பை தருவேன். எனக்கு டீம்மே முக்கியம்.”

இந்த பதிவு பலரது பரட்டை பெற்றுள்ளது. இம்ரான் தாஹிர் மீதான மதிப்பும் அதிகரித்துள்ளது. அட இப்படி பட்ட நல்லவரை போய் வெளியே உட்கார வைத்துள்ளார் தோனி என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

tweet

அதோடுமட்டுமன்றி காயம் அடைந்த பிராவோவிற்கு பதில் அணியில் பராசத்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர் சேர்க்கப்படுவார், அப்போ நிலைமை மாறும் சி எஸ் கே மீண்டும் வெற்றி பாதைக்கு செல்லும் என பேசி வருகின்றனர். பார்ப்போம் தோனி என்ன முடிவு எடுக்கிறார் என்று.

Continue Reading
To Top