வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தான் சென்னை சூப்பர் கிங்கிசின் காயம் அடையும் வீரர் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டு வருட தடையை முடித்துக்கொண்டு, கம் பேக் கொடுத்துள்ளது சென்னை அணி. இரண்டு தோல்வி மற்றும் ஐந்து வெற்றியுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளது.

சீசன் துவங்கும் முன்பே காயம் காரணமாக சாண்ட்னெர் வெளியேறினார். பின்னர் டு பிளெஸ்ஸி மற்றும் முரளி விஜய் ஓய்வில் இருந்தனர். முதல் போட்டியில் கேதார் ஜாதவ் காயம் அடைந்து தொடரில் இருந்து விலகினார். பின்னர் ரெய்னா இரண்டு போட்டிகள் ஆடவில்லை. தொனியும் பிட்னெஸ் இல் தடுமாறினார்.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற மும்பையுடனான போட்டியில் சென்னை அணி முதலில் பார் செய்து 169 ரன் குவித்தது. அடுத்து ஆடிய மும்பை 8 விக்கெட் வித்யசத்தில் வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீசும்போது, ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வீசினார். ஓவரின் முதல் பந்தை வீசியபோது அவரின் கால் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். ஹர்பஜன் தொடர்ந்து பந்து வீசினார். இந்நிலையில் ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டுள்ளதால் இரண்டு வாரங்கள் சாஹர் ஓய்வில் இருப்பார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

Deepak Chaharசாஹர் இதுவரை 7 போட்டிகளிலும் ஆடியுள்ளார். அதில் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இது சென்னை அணிக்கு பின்னடைவு தான். எனவே வெளிநாட்டு வீரக்களில் தென்னாபிரிக்காவின் நிகிடி, அல்லது இங்கலாந்தின் மார்க் வுட், டேவிட் வில்லே யாரேனும் களம் இறங்குவார்களா ? அல்லது இந்திய பௌலர்கள் ஆசிப், மெனு குமார் அல்லது கரண் சர்மா விளையாடுவார்களா ? என்று தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.