CSK
CSK
சி எஸ் கே

ஐபில் இன் 11 வது சீசன் இந்த வாரம் கோலாகலமாக துவங்க உள்ளது. இரண்டு வருட தடை முடிந்து மீண்டும் தோனி தலைமையில் இந்த அணி களம் இறங்குகிறது. ஐபில் போட்டிகளை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் அணி என்றால் முதலில் சென்னை, பின்பு மும்பை மற்றும் கொல்கத்தா வரும். இது வரை 8 சீசன்கள் ஆடிய இந்த அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது, நன்கு முறை ரன்னர் ஆக வந்துள்ளது, இரண்டு முறை செமி – பைனல் வரை சென்றுள்ளது. எனினும் சிறிய இடவெளிக்கு பின் வரும் இந்த அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி பார்ப்போம் ..

பிளஸ்

மெயின் வீரர்கள்

இந்த அணியின் பிளஸ் என்றால் அது தல தோனி மற்றும் அவரின் தலைமை என்று அனைவருக்கும் தெரியும். எனினும் பல வருடங்களாகவே இந்த நிர்வாகம் மெயின் பிலயேர்களை தக்கவைத்துள்ளது. ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டு பிளெஸ்ஸி போன்றவர்கள். இந்த முறை தான் அஸ்வின் அவர்களை எடுக்கவில்லை எனினும் மாற்றாக முரளி விஜய் வந்துவிட்டார். இந்த 5 – 6 மெயின் வீரர்கள், அவர்களுடன் கரண்ட் பார்ம் அடிப்படையில் உள்ளூர், வெளிநாடு வீரர்களை சேர்த்து பாடுவதே இவர்களின் பலம்.

அதிகம் படித்தவை:  IPL XI கனவு வீரர்களை வெளியிட்ட வார்னே மற்றும் அகார்கர்!

பேட்டிங் வல்லமை

CSK

வேண்டுமே சென்னை அணி தலை சிறந்த பேட்டிங் ஸ்ட்ரென்த் உள்ளதாகவே இருக்கும். இம்முறை கூட அணியில் ஐபில் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் இவர்களிடம் தான் அதிகம். ரெய்னா – 4540 , தோனி – 3560 , வாட்சன் – 2622 , முரளி விஜய் – 2511 , ராயுடு – 2416 . மேலும் இந்த வீரர்கள் அனைவருக்குமே ஸ்ட்ரிக் ரேட் நூறுக்கு மேல் தான் உள்ளது.

ஸ்பின்னர்கள்

என்றுமே சென்னையின் பலம் ஸ்பின் தான். இம்முறை அஸ்வின் இல்லையென்றாலும் ஜடேஜா, ஹர்பஜன் சிங் , கரண் சர்மா, தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் என விதவிதமான ஸ்டைலில் பந்து வீசுபவர்களை அணியில் வைத்துள்ளனர். இது மட்டுமல்லாது ரெய்னா மற்றும் ஜாதாவும் ஆப்- ஸ்பின் வீசுவார்கள்.

வெறித்தனமான ரசிகர்கள்

சென்னையில் நடக்கும் போட்டிகள் மட்டுமல்லாது, எந்த ஊரில் சென்றாலும், இந்த டீமிற்கு சப்போர்ட் குவியும், அதுவே இவர்களுக்கு கூடுதல் பலம்.

மைனஸ்

30 + வயது

என்றுமே டி 20 என்பது இளசுகளின் விளையாட்டு என்ற மனநிலையே பலருக்கு உள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது இந்த டீம்மில் உள்ள 25 வீரர்களில் 11 பேர் முப்பதுக்கு மேல் உள்ளவர்கள் தான். என்னதான் நல்ல பிட் ஆனவர்கள் என்றாலும் தொடர்ந்து இரண்டு மாதம் விளையாடும் பொழுது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

அதிகம் படித்தவை:  "தல" தோனிய எவண்டா தப்பா பேசுனது… தோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த பழைய பங்காளி !
CSK

வேகப்பந்துவீச்சாளர்கள்

ஆரம்ப சீசன் முதலே, இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தட்டுப்பாடு தான். இந்த ஆண்டும் ஷரத்துல் தாக்குர் தவிர்த்து யாரை விளையாட வைப்பார்கள் என்பதில் குழப்பம் தான். பிராவோ மற்றும் வாட்சன் அணியில் இடம் பெற்றாலும் லுங்கிடி நிகிடி, மார்க் வுட், தீபக் சாஹர், ஆசிப் போன்றவர்கள் எந்தளவுக்கு அணியில் செட் ஆவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இளம் அறிமுக வீரர்கள்

அணியில் உள்ள 9 வீரர்களுக்கு இது தான் அறிமுக சீசன். இதுவரை அவர்கள் ஐபில் போட்டிகளில் விளையாடியது கிடையாது. இந்த வீரர்கள் சீனியர் வீரர்களுடன் இணைந்து, கற்றுக்கொண்டு ஆட வேண்டிய நிலையில் தான் உள்ளது டீம் நிலவரம்.

சினிமா பேட்டை வெர்டிக்ட்

எப்படி பார்த்தாலும் இந்த அணி டாப் 4 இல் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை. எனினும் கப் ஜெயிக்க வாய்ப்புள்ளதா என்பது சீசன் தொடங்கிய பின் தான் சொல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க !