Connect with us

Cinemapettai

இந்த மாதிரி போட்டி முடிவுகள் ஏற்பட்டால் சிஎஸ்கே பிளே – ஆப் தகுதி பெரும்! முழு கேல்குலேஷன் உள்ளே

csk-team

Sports | விளையாட்டு

இந்த மாதிரி போட்டி முடிவுகள் ஏற்பட்டால் சிஎஸ்கே பிளே – ஆப் தகுதி பெரும்! முழு கேல்குலேஷன் உள்ளே

இந்த ஐபிஎல் 2020 புதிய சீசனில் சென்னை சொதப்பல் கிங்ஸ் என பெயர் வாங்கி வருகின்றனர். கையில் ஈஸியாக ஜெயிக்க வேண்டிய மேட்சை விட்டு விட்டு தடுமாறி வருகின்றனர். 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை இந்தளவுக்கு சொதப்பியது.

டாடிஸ் டீம் என கிண்டல் செய்தாலும், கடந்த இரண்டு சீசன் சூப்பர் ஆக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்த டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு வந்துவிட்டது நிலமை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம், ஆனால் தங்களின் முழு திறனையும் வழங்க வேண்டும். இந்த சீசன் அந்த விஷயத்தில் சி எஸ் கே சொதப்பல் தான்.

csk

csk

பல டீம்களும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கலக்கி வந்த நிலையில், தோனி மட்டும் செயல்முறை (புரோசஸ்) சரியெனில் வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை எனவும் சொல்லி வந்தார். இளம் வீரர்களிடம் நாங்கள் அந்தளவுக்கு உத்வேகத்தை பார்க்கவில்லை என சொல்லின பலரையும் வெறுப்படைய செய்தது. ஜாதவ், சாவ்லா போன்றவர்கள் டீம்மில் விளையாட ஜெகதீசன், கைக்கவாட் போன்ற இளம் வீரர்களுக்கு ஒன்று, இரண்டு போட்டி தான் வாய்ப்பு கிடைத்தது. இம்ரான் தாஹிர் ஒரு போட்டி கூட ஆடவில்லை.

தோனி மற்றும் பிளெமிங் கூட டீம் குவாலிபய் ஆகும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டது போலவே பேசினார்கள். ஆனால் சி எஸ் கே தொடர்ந்து வெற்றிகளை குவிக்க, மற்ற சில போட்டிகள் இவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆகும் பட்சத்தில் சென்னை பிளே – ஆப் வரை செல்ல வாய்ப்புள்ளது.

முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் நம்பிக்கையுடன் ஆடி வெற்றிகளை குவிக்க வேண்டும். சி எஸ் கே அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ், ஆர் சி பி, கொல்கத்தா நயிட் ரைடர்ஸ், பஞ்சாப் உடனான போட்டிகளில் ஜெயிக்க வேண்டும். அதே போல டாப் மூன்று நிலைகளில் உள்ள டெல்லி காப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர் சி பி அவர்களின் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இப்படி நடப்பதோடு கொல்கத்தா தான் ஆடும் 4 போட்டிகளில் குறைந்த பட்சம் மூன்றிலாவது தோற்க வேண்டும், அதே சமயத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதெராபாத் இரண்டு வெற்றிகளுக்கு மேல் பெறக்கூடாது. இப்படி நடக்கும் பட்சத்தில் 14 புள்ளிகளுடன் ரன் ரேட் சிக்கல் இல்லாமல் சி எஸ் கே தகுதி பெரும்.

points table

தொடர்ச்சியாக மிக பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அப்படியெனில் ரன் ரேட் ப்ளஸ்ஸில் செல்லும். அந்தநேரத்தில் பல டீம்கள் 14 புள்ளிகளுடன் நான்காவது ஸ்பாட் நோக்கி காத்திருப்பர்.

இன்றைய போட்டியில் மும்பையுடன் தோல்வி அடைந்தாள் கூட லக் தன் வசம் இருந்தால் சி எஸ் கே பிளே ஆப் செல்லும். அட ஆமாங்க சாத்தியமா தான் சொல்றேன். 12 புள்ளிகளுடன் ஹைதெராபாத் சென்ற முறை பிளே ஆப் ஆடியது. எனினும் நெகட்டிவ் ரன் ரேட் உள்ளதால் அதிக ரன் அல்லது விக்கெட் மார்ஜினில் சி எஸ் கே வெற்றி பெற வேண்டும்.

இதெல்லாம் நாம் பேசுவது, சி எஸ் கே நிர்வாகம் என்ன யோசிக்கும், இன்றைய போட்டியில் யார் உள்ளே, வெளியே .. ஸ்பார்க்குடன் விளையாடுவார்களா என பல கேள்விகள் உள்ளது சாமானிய சி எஸ் கே ரசிகனுக்கு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top