இரண்டு ஆண்டு கால தடை முடிந்து மீண்டும் சென்னை சுப்பர் கிங்ஸ் மீண்டும் களம் இறங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், சென்னை அணியின் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்பது தான் உண்மை.

சிஸ்கே

chennai ipl

ஏற்கனவே தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்கவைத்து சிஸ்கே தனது ரசிகர்களை குஷி படுத்தியது.

ஸ்டீபன் பிளெமிங்

Fleming

பின்னர் தலைமை பயிற்சியாளராக தங்களின் ஆஸ்தான நபரான ஸ்டீபன் பிளெமிங் அவர்களை மீண்டும் நியமித்தது.

மைகேல் ஹஸ்சி

Hussey

தோனி( 3436 ) , ரெய்னாவுக்கு( 4541 ) அடுத்தபடியாக சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் ஆஸ்திரேலியாவின் மைகேல் ஹஸ்சி. அவர் சென்னை அணிக்காக 64 போட்டிகளில் 2213 ரன்கள் எடுத்து இருந்தார். இவரை பேட்டிங் கோச் ஆக நியமித்தார்கள்.

மேலும் பழைய அணியின் ட்ரைலர் கிரிகோரி கிங் மற்றும் பிசியோ டாமி சிம்ஸ்க் போன்றவர்களையும் மறுபடி ஒப்பந்தம் செய்தனர்.

பாலாஜி- பௌலிங் கோச்

L Balaji

இந்நிலையில் பௌலிங் கோச் ஆக நம் தமிழகத்தின் லட்சுமிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வின் அவர்களை ஏலத்தில் கண்டிப்பாக எடுத்து விடுவார்கள், என்ற பலரும் அடித்து கூறிவருகின்றனர். எனவே இந்த வருடம் மீண்டும் சென்னை கலை கட்டப்போகிறது.