Sports | விளையாட்டு
இம்ரான் தாஹிரும் CSK பாசமும்! லைக்ஸ் குவிக்குது சி எஸ் கே அட்மின் பதிவிட்ட போட்டோ, ஸ்டேட்டஸ்
லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 40 வயதாகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். பாகிஸ்தானில் வாய்ப்பு குறையவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாட சென்றார். அங்கிருந்து தென் ஆப்பிரிக்கா குடிபெயர்ந்தார். அதன் பின் இவர் தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்.
சர்வதேச ஓய்வுக்கு பின்னும் தன் லெக் ஸ்பின் மூலமாக, உலகெங்கிலும் உள்ள டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அசுர வேகத்தில் மைதானத்தை சுத்தி ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது . அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவருக்கு “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரும் உண்டு.
மனிதர் சமீபத்தில் நடந்த தென்னாபிரிக்க டி 20 லீக்கில் விக்கெட்டுகளை குவித்தார். நல்ல பார்மில் உள்ள இவர் சி எஸ் கே டீமுக்கு நல்ல பலமாக இருப்பார். சென்னை டீம் அட்மின் சூசகமாக ட்வீட் தட்டியுள்ளார். அதில் அதிகபட்சமாக 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், எனவே அதிக ரன்னும் இவர் தான் எடுத்துள்ளார், என அவர் விக்கெட் எடுத்த பின் கொண்டாடும் ஸ்டைலை பற்றயும் சொல்லியுள்ளார்.
17 wickets in the @MSL_T20 to finish as the leading wicket taker which means he's also the leading 'run-getter'. Heartmelts to look at the #yellove head band! #ParasakthiExpress, ladies and gentlemen! #WhistlePodu pic.twitter.com/Vx2iCdO4gk
— Chennai Super Kings (@ChennaiIPL) December 17, 2019
அது மட்டுமன்றி, சென்னை அணியின் யெல்லோ கலரிங் தலையில் பாண்ட் அணிந்திருப்பது நெஞ்சை உருகவைக்கிறது மக்கள்வே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
