fbpx
Connect with us

பேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .

karthik-subburaj

News | செய்திகள்

பேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .

சி எஸ் அமுதன்

தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது படம்” என ஆரம்பித்தார், அது டிராப் ஆனது. பின்னர் மீண்டும் தமிழ் படம் 2 இயக்கினார். அதுவும் ஹிட் அடித்தது.

இவர் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பவர். சில சமயங்களில் இவர் ட்வீட் பாராட்டையும், பல சமயங்களில் எதிர்மறை ரீயாக்ஷனையும் பெரும். ஆனால் அதற்கெல்லாம் சளிக்காதவர் ஆச்சே நம் இயக்குனர்.

பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைல் சாம்ராட் ரஜினியை மீண்டும் கண் முன் கொண்டுவந்துவிட்டார் என்பதே நம் கோடம்பாக்கத்தில் பேச்சு. திரையில் சூப்பர் ஸ்டாரை நண்டு, சிண்டு முதல் பெரியவர்கள் வரை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

petta

இந்நிலையில் படத்தினை பற்றிய ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார் அமுதன். “பேட்டையில் எனக்கு பிடித்தது என்னவென்றால் பிற படங்களின் காட்சியை அழகாக தன் திரைக்கதையில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குனர். அவர் ஒரு ஜீனியஸ்.” என்பதே அது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top