Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் !

தமிழ் படம்

ஹாலிவுட்டில் ஒரு படத்தையோ, அல்லது மூன்று நான்கு படங்களை கலாய்த்து எடுக்கும் ஸ்பூப் படங்கள்(spoof movie) நிறைய வெளிவரும். அதுவும் அங்கு ஹிட் ஆகும். நம்ப ஊரில் பல தடைகளை தாண்டி அந்த பாணியில் வெளியானது தான் தமிழ் படம்.

இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் ரெடி ஆகியுள்ளது. இம்முறை போலீஸ் அத்தியாயம் தான் மெயின் என்று விளம்பர படுத்தினர். எனினும் சினிமா துறை மட்டுமன்றி உள்ளூர் அரசியல் தொடங்கி டிரம்ப் வரை கலாய்த்துவிட்டனர். ஏற்கனவே முதல் லுக், டீஸர் என அனைத்தும் மாஸ் ஹிட் அடித்து, படத்தின் ரிலீசுக்கு ரெடி ஆகிவருகின்றது.

இந்நிலையில் இயக்குனர் அமுதன் தயாரிப்பாளர் படத்தை பார்த்து விட்டார் என்று சசிகாந்த் தலையில் கை வைத்து அமர்ந்துள்ளது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும் இயக்குனர் ஆதரவாக தட்டி கொடுக்கிறார்.

tp 2.0

இந்த போட்டோ 1100 ரி – ட்வீட், 6500 லைக்குகள் கடந்து வைரல் ஆகியுள்ளது.

இந்த டீவீட்டிற்கு தலையில் கை வைத்துள்ள இமோஜி வெளிட்டு பெரிய கும்பிடை போட்டுள்ளார் தயாரிப்பாளர்.

எதை எடுத்தாலும் இவர்களின் குசும்புக்கு மட்டும் குறைவே இல்லை. நம் நெட்டிசன்களும் மீம்ஸ் தட்டி விட ஆரம்பித்துவிட்டனர்.

THAMIZH PADAM MEMES

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top