நடிகர் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அவரது படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

உதயநிதி, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘இப்படை வெல்லும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் இசைத்தகட்டை வெளியிட்டார்.

ippadai vellum

அடுத்து பேசிய உதயநிதி, “இந்தப் படத்துல தெரியாம ஒத்துக்கிட்டோமானு சில நேரம் நினைச்சிருக்கேன். ஏன்னா, என்னை வெச்சு செஞ்சுட்டாங்க இந்தப் படத்துல. கெளரவ் வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, கண்ணாடி க்ளாஸ் எல்லாம் உடையிற அளவுக்கு எமோஷனோட சொன்னார்.

இந்தப் படத்துல நானும் மஞ்சிமாவும் ரெண்டே ரெண்டு காஸ்ட்யூம்தான் பயன்படுத்திருப்போம். ஒரு சில ஷாட் எடுக்கும்போது கேமரா எங்கெல்லாம் வெச்சிருக்காங்க, எத்தனை கேமரா வெச்சிருக்காங்கனே தெரியாது.

படம் ஓடுறதைவிட நான் இந்தப் படத்துல நிறைய ஓடியிருக்கேன். வில்லனா நடிச்சிருக்கிற ஆர்.கே.சுரேஷ் ஃபைட் சீன்ல உண்மையாவே அடிச்சுட்டாருங்கனு டைரக்டர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணேன்.அவர் உண்மையாவே அடிக்கிறாருங்க.

udhayanidhi-stalin

ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம், ‘இந்த ஆளு உண்மையாகவே அடிக்கிறார் சார், வலிக்குது’ என அழுதேன். காட்சிகள் ரியலாக இருக்கவேண்டும் என்பதற்காக அடிவாங்கியும் நடித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

டைரக்டர் என்கிட்ட உங்களை நினைச்சு எழுதுன கதைனு சொன்னார். ஆனா, இது மாதிரியே சில பேர்கிட்ட சொல்லிருக்கார்னு அப்பறமாதான் தெரிஞ்சுது” என்று சிரித்தவரை மேடையிலே சிறைபிடித்து வைத்தனர் தொகுப்பாளர்கள், மேடைக்குக் கீழே இருந்த கிருத்திகா உதயநிதியிடம் ‘உதயநிதி எந்த ஹீரோயின்கூட நடிச்சா அழகா இருக்கும்னு நினைக்குறீங்க?’ என்று கேட்க, ‘ஹீரோயினே இல்லாம ஒரு படம் நடிச்சு சக்சஸ் கொடுத்தா நல்லா இருக்கும். அதுக்கான ஸ்கிர்ப்ட் என்கிட்டேயே இருக்கு’ என்றார் கிருத்திகா உதயநிதி.