கொழும்பில் செயற்படும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் பெண், பணிநேரம் முடிந்து வீடு சென்ற வேளையில் வெள்ளை வேனில் வந்த மர்மநபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் கடந்த 19ம் திகதி இடம்பெற்றதாக பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட பெண் நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படம் எடுத்த பின்னர் நடுவீதியில் கைவிடப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிநேரம் முடிந்து அங்கு பணியாற்றும் மற்றொருவருடன் மோட்டர் சைக்கிளில் பயணித்த வேளையில், மஹரகம ரத்மல்தெனிய பிரதேசத்தில் வைத்து இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை வேனில் வந்தவர்கள் சிலர் துப்பாக்கியை காட்டி இருவரையும், வெள்ளை வானில் கடத்தி சென்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து விட்டு கொட்டாவை ரயில் பாலத்திற்கு அருகில் மீண்டும் வீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர்கள் பயணித்த மோட்டார் வாகனத்தை இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.